மேயர் ஆர்.பிரியா, புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப்பார்வையிட்டார். முதற்கட்டமாக புரசைவாக்கத்தில் உள்ள சுந்தரம்தெருவில் இயங்கி வரும் சமுதாய வல்லூரியில் 200 மகளிருக்கான தையல், ஆரி எம்பிராய்டரி பயிற்சியும், 75 மகளிருக்கு கணினி பயிற்சி, அழகு கலை பயிற்சியும் துவங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப் பள்ளியில் தொழிற் பயிற்சிக்கான பயிற்சிபெறுபவரின் (மகளிர்) சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த சமுதாயக் கல்லூரிகளில் பயிற்சி 3 மாதம்முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் பயிற்சி சான்றிதழும், உதவித்தொகை தலா ரூ.1,000/- வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார்.இ.ஆ.ப., அண்ணாநகர் மண்டலக்குழுத் தலைவர் கூ.பி ஜெயின், மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்சுருதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.