இந்தியா ஒரே நாடு இல்லை என்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு சரத்குமார் கண்டனம்

இந்தியா ஒரே நாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அர்த்தமற்று பிரிவினையை உருவாக்கும் விதமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் கூறிய பல குற்றச்சாட்டுகளில் ஒன்றை  தற்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன். உதாரணத்திற்கு, தமிழக மீனவர்களை ஏன் இந்திய மீனவர்கள் என மத்திய அரசு அழைக்கவில்லை என்று அவர் கேட்கிறார். இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என பொதுவாகச் சொன்னால் மும்பையா? மேற்கு வங்கமா? குஜராத்தா? வங்காள விரிகுடாவா? இந்திய வரைபடத்தில் தெற்கிலா? கிழக்கிலா? மேற்கிலா? என எந்த பகுதியில் சம்பவம் நடந்தது என மக்கள் அறிய இயலாது. தமிழக மீனவர்கள் என்று சொன்னால் தான், நமது மீனவர்கள் இன்னலில் இருக்கிறார்கள் என்று தமிழக மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

 இந்தியா என்ற ஒருங்கிணைந்த மாநில கூட்டமைப்புக்குள், தமிழ்நாடு ஏற்கெனவே ஓர் அங்கமாக திகழும் போது, இந்தியாவில் இருக்கின்ற தமிழக மீனவர்கள் என்றா செய்தி போடுவார்கள்?  தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு முன்வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால், இலங்கை அரசுக்கு உதவி செய்து இந்தியா எப்போதும் ஒரு நட்பு நாடாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. இதுவரைஇலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது உடமைகளையும் மீட்க  இந்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வருவதை திரு. சீமான் தெரிந்து கொள்ளவில்லை என்பது வேடிக்கையானது