விஜய் ஆண்டணி நடிக்கும் “ஹிட்லர்” திரைப்படம் செப்.27ல் வெளியீடாகிறது

செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல்  தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும்  செப்டம்பர் 27  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றினார். அங்கிருந்த 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு,  அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர். இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப்பிறகு  நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.*********

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது… “இந்தப்படத்தைத் தயாரித்த நண்பர் ராஜாவுக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படத்தில் இயக்குநர் தனா அருமையான கருத்தை வைத்திருக்கிறார். ரசிகர்களுக்குப் பிடிக்கும்  படமாக இப்படம் இருக்கும். திரையரங்கில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. பரபரப்பு திருப்பங்களுடன் ஒரு அழகான  காதலும் கலந்த திரைக்கதையில், அனைவரும் ரசிக்கும் வகையிலான, திரைப்படமாக இப்படம் இருக்கும்” என்றார்.