விவடாயிகளின் குறைகளை கேட்டறியும் செங்கல்பட்டு ஆட்சியர்

மகளிர் சுய உதவிக் குழுவுக்கு இலவச ‘டிரோன் ஸ்பிரேயர்’  செங்கல்பட்டு, செப்டம்பர் 27 – நமோ டிரோன் தி தி திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு, வேளாண் பயன்பாட்டுக்கான ‘டிரோன் ஸ்பிரேயர்’ இலவசமாக டிரோன் வழங்கப்பட்டது. நமோ டிரோன் தி தி திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் கட்டமாக, ஐந்து பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் எல் எண்டத்தூர் ஊராட்சியில் அன்னை தெரசா மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த லட்சுமி அவர்களுக்கும், நெடுங்கல் ஊராட்சியில் புதுமை பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சுகன்யா அவர்களுக்கும் மற்றும் மதுராந்தகம் ஒன்றியத்தில் கவாத்தூர் ஊராட்சியில் தண்டு மாரியம்மன் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கும், ஓணம்பாக்கம் ஊராட்சியில் பச்சையம்மன் மகளிர் சுய குழுவைச் சார்ந்த ஸ்வேதா அவர்களுக்கும், நெற்றம்பாக்கம் ஊராட்சியில் டாக்டர் அப்துல் கலாம் மகளிர் சுய உதவி குழுவை சார்ந்த முனியம்மாள் அவர்களுக்கும் டிரோன் ஸ்பிரேயர் வழங்கப்பட்டுள்ளது.

நமோ டிரோன் தி தி திட்டத்தில் வழங்கப்பட்ட டிரோன் ஸ்பிரேயரை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு பயனாளி டிரோன் ஸ்பிரேயர் காட்சிப்படுத்தப்பட்டதை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப பார்வையிட்டார். டிரோன் ஸ்பிரேயர் இலவசமாக வழங்கப்பட்டதையும், டிரோனை இயக்குவது தொடர்பாக, பயனாளியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப  அவர்கள் கேட்டறிந்தார். இதுகுறித்து பயனாளி கூறியதாவது: இந்த டிரோன் ஸ்பிரேயரைப் பயன்படுத்தி குறை வான நேரத்தில், குறைந்த செலவில் சீராக பூச்சிக் கொல்லி, திரவ உரம், மீன் அமிலம் போன்றவற்றைத் தெளிக்க முடியும்.வாடகை அடிப்படையில் வருவாய் ஈட்ட முடியும். மகளிர் மேம்பாட்டுக்காக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. மேலும், சார் ஆட்சியர் நாராயண சர்மா, இ.ஆ.ப.,  இணை இயக்குநர் / திட்ட இயக்குனர்,  லோகநாயகி, மகளிர் திட்டம் மற்றும் வேளாண்மை துறை உயர் அலுவலர்கள் செல்வபாண்டியன் வேளாண்மை இணை இயக்குநர், ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.