சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம்

ஸ்வச் பாரத் மிஷன் தொடங்கப்பட்ட 10வது ஆண்டின் நினைவாக, இந்திய அரசின் முன் முயற்சியால், தூய்மையே சேவை, 2024  பிரச்சாரம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2024 வரை ’தூய்மை சுபாவம் – தூய்மை கலாச்சாரம்’ என்ற கருப்பொருளுடன் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தூய்மையே சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம், சென்னை, ஷெனாய் நகர், திரு-வி-கா பூங்காவில், 26.09.2024 அன்று தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகத்தை நடத்தியது.  லயோலா கல்லூரியின் கலை மற்றும் இலக்கியத் துறை மாணவர்களால் தெருமுனை நாடகம் நடத்தப்பட்டது.  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம், சுய தூய்மை மற்றும் பொதுத் தூய்மை ஆகியவற்றின் அவசியத்தைப் பற்றி  மாணவர்கள் தங்கள் சொந்த கலை வடிவங்களால் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  வருமான வரி மூத்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பூங்காவிற்கு வருகை புரிந்த பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

 சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் திரு.சுனில் மாத்தூர், விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றுகையில், நமது வருங்கால சந்ததியினருக்கான தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொரு குடிமகனிடமும் தூய்மையின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.