“தில் ராஜா” திரைப்படம்

கோவை பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் ஏ.வெங்கடேசன் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தில் ராஜா”.  ஆறடி உயரமும் வயிற்றில் ஆறு மடிப்பு உடற்கட்டும் கொண்ட கதாநாயகன் விஜய் சத்யாவை ஒரு பூங்காவில் சில ரவுடிகள் அடித்து மிதித்து மயக்கமுற்று கிடக்கச் செய்கிறார்கள். அந்த மயக்கத்திலேயே வ்ஜய் சத்யாவின் கடந்தகால நினைவுகள் வருகிறது. அரசியல்வாதியான ஏ. வென்கடேசனின் மகன் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை விஜய் சத்யா மீது விழுகிறது. அந்த கொலை வழக்கிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. ஆறடி உயரமும் ஆறு மடிப்பு உடற்கட்டும் கொண்ட விஜய் சத்யா தன் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல், இயக்குநர் ஓடு என்றால் ஓடியிருக்கிறார், அடி என்றால் அடித்திருக்கிறார், படு என்றால் படுத்திருக்கிறார். அழகான உருவம் கொண்ட விஜய் சத்யாவை பாவைக்கூத்து மொம்மைபோல கையில் கயிற்றைக்கட்டி ஆட்டி வைத்திருக்கிறார் இயக்குநர். இனிப்புக் கொடுத்தே கொல்லும் அமைதியான அரசியல்வாதியாக தன் நடிப்பில்  முத்திரை பதித்திருக்கிறார் ஏ.வெங்கடேசன். ஆத்திரப்படுவதிலும் அமைதிப்படுவதிலும் அப்பாவாகவே காட்சி தருகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். பாலாவும் லொள்ளுசபா மனோகரும் நகைச்சுவைக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். (இமாம்) அண்ணாச்சி “ஓலா”வுக்கு என்னாட்சி?——. வணிக ரீதியில் படமெடுப்பதில் வல்லவரான இயக்குநர் ஏ.வெங்கடேசன், இப்படத்தில் திரைவானில் பறக்கும் ஒரு நட்சத்திர பலூனில் வியாபாரம் ஆகுவதற்காக இவரும் ஊதியிருக்கிறார்.