‘செல்ல குட்டி’ திரைப்படம் அக்.4ல் வெளியீடு

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’.  புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் பாடல் மரும் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது.********

இறுதியில் நன்றியுரை ஆற்றிய படத்தின் தயாரிப்பாளர் வி.மணிபாய் பேசுகையில், “செல்ல குட்டி படத்தையும், படக்குழுவினரையும் வாழ்ந்த வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. உங்களை போல் தான் நானும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் இந்த சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கோயம்பேட்டு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி தான் என் வாழ்க்கையை தொடங்கினேன். நான் பெரிய பணக்கார வீட்டு பையன் கிடையாது, கடுமையாக உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன், நீங்கள் தான் செல்ல குட்டி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து என்னை வாழ வைக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார். 90-களில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலிக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘செல்ல குட்டி’ திரைப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.