மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் சென்னையில் பறிமுதல் – 3 பேர் கைது

சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனைய சுங்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 27.09.2024 அன்று கோலாலம்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த இரண்டு ஆண் பயணிகளை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த இரு பயணிகளும் அரிய வகை வன உயிரினத்தை இந்தியாவிற்கு கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்தப் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டதில், 4,967 சிறிய வகை பச்சை நிற ஆமைகளும், 19 பழுப்பு / மஞ்சள் நிற ஆமைகளும் இருப்பது தெரியவந்தது.   இது குறித்து வன உயிரின குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து பரிசோதனை செய்ததில் அவை சிவப்பு நிற காது உடைய மற்றும் ஆல்பினோ சிவப்புக் காது வகை ஆமைகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக விமான நிலைய சுங்கத் துறையினர்  மேற்கொண்ட விரைவான நடவடிக்கை காரணமாக, கடத்தி வரப்பட்ட ஆமைகளை பெற்றுக் கொள்ள வந்த நபரையும் பிடித்தனர். பின்னர், இரண்டு பயணிகள், கடத்தல் பொருட்களை  பெற வந்த நபரும் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது