சண்முகப்பாண்டியன் விஜய்காந்த் நடிக்கும் படம் “படை தலைவன்*

 இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இளையராஜாவின் இசையில் “படைதலைவன்” படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது. வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் இணை தயாரிப்பில்  உருவாகி இருக்கும் படம்,  “படை தலைவன்”.  இப்படத்தில் சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன. இளையராஜாவின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். “படை தலைவன்” படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார் வெளியிட உள்ளார். இசை வெளியீடு,  படம் வெளியிடும் தேதி குறித்து  விரைவில் அறிவிப்பு வெளியாகும்.