தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத் திட்டத்தின்சென்னை – மாமல்லபுரம், திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் – 1, 2, சுவாதி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்கள் ஆகிய ஒரு நாள் சுற்றுலா பயணங்களை சுற்றுலா பயணிகள் மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள், 3 நாட்கள், 8 நாட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான 52 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது. சுற்றுலா பயணங்கள் மனமகிழ்ச்சியையும், புதிய நண்பர்களையும், நெஞ்சில் நீங்காத நினைவுகளையும் சுற்றுலா பயணிகளுக்கு அளித்து வருகின்றன.

இன்று (5.10.2024) சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்தில் இருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத்திட்டத்தின் சென்னை – மாமல்லபுரம், திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் – 1, 2, சுவாதி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்கள் ஆகிய ஒரு நாள் சுற்றுலா பயணங்களை சுற்றுலா பயணிகள் மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சென்னை – மாமல்லபுரம் ஒரு நாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பேருந்து சென்னை வாலஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 9.00மணிக்கு புறப்பட்டு திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், சோழிங்கநல்லூர் இஸ்கான் டெம்பிள், முட்டுக்காடு தட்சண சித்ரா பாரம்பரிய அருங்காட்சியகம், முட்டுக்காடு படகு குழாம், சென்னை முதலைக் காப்பகம், சாளுவன்குப்பம் புலிக்குடைவரை, மாமல்லபுரம் ஐந்து ரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட பின்னர் இரவு 7.00 மணிக்கு சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.இன்று மாமல்லபுரம் சுற்றுலா பயணத்தை கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மேற்கொண்டனர்.  

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,   பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி திருக்கோயில்,   திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில்,  சிங்கபெருமாள்கோவில் அருள்மிகு பாடலாத்ரி  நரசிம்மர் திருக்கோயில்,  திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.                                   .
  சென்னையில் திவ்யதேசம் பெருமாள்திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் –2ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமழிசை அருள்மிகுஜகன்னாத பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் அருள்மிகு வைத்திய வீர ராகவ பெருமாள் திருக்கோயில்,  ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி அருள்மிகுவரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.    

  சுவாதி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டத்தின் கீழ் சுவாதி நட்சத்திர தினத்தன்று சுற்றுலா மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சுற்றுலா பயணத்திட்டத்தின் கீழ் காலை 6.00 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் இருந்து புறப்படும் சுற்றுலா பேருந்து சிங்கிரிக்குடி அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில்,  பூவரசங்குப்பம் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களுக்கு சென்று இரவு 9.00 மணிக்கு சென்னை வந்தடையும்.

 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டங்களின் கீழ் சுற்றுலா மேற்கொள்ள சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாகவும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்.180042531111  மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333,044-25333444  ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.  

இத்தகைய அருமையான சுற்றுலா பயணத்தினை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு அரசிற்கு சுற்றுலா பயணிகள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.