தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்புடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு. (AIMO) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.10.2024 அன்று சென்னையில் கையெழுத்தானது. டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானி (இயக்குநர், மனிதவளம் மற்றும் நிர்வாகம், பிஎஸ்என்எல்) மற்றும்  ஆர். ராதாகிருஷ்ணன் (தேசிய பொதுச் செயலாளர், ஏஐஎம்ஓ) ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்விரு அமைப்புகளும் தங்களுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இந்த ஒப்பந்தத்தின் வழியாக மேம்படுத்தவுள்ளன. அதி நவீன தொலைத் தொடர்பை கொண்டு சேர்ப்பது, தகவல் பாதுகாப்பை மேம்படுத்துவது, கண்ணாடி இழை தொழில்நுட்ப சேவைகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.  அலைபேசி தகவல் தொடர்பு, கண்ணாடி இழை தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சிகளை மாணவர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்க இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. புரிந்துணர்வு ஒப்பந்தச் செயல்பாட்டிற்கான பிஎஸ்என்எல் உயரதிகாரிகள்: டாக்டர். கல்யாண் சாகர் நிப்பானி, இயக்குநர், மனித வளம் (பிஎஸ்என்எல் வாரியம்) எஸ்.பார்த்திபன் ஐடிஎஸ், முதன்மை பொது மேலாளர் (தமிழ்நாடு வட்டம்) டாக்டர் மணீஷ் சுக்லா, முதன்மை பொது மேலாளர் (BRBRAITT) அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பின் (ஏஐஎம்ஓ)முக்கியஸ்தர்கள்:  ராஜீவ் ரஞ்சன், தேசிய தலைவர், ஏஐஎம்ஓ ஆர். ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச் செயலாளர், ஏஐஎம்ஓ சுதிர் ஜா, தேசிய அமைப்பாளர், ஏஐஎம்ஓ.