தமிழக பாஜக மாநில செயலாளரும் முன்னாள் மேயருமான கராத்தே ஆர்.தியாகராஜனின் மணிவிழா நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன் ஜோதி தியாகராஜன், தமிழக பாஜக மாநில செயலாளர் சதீஷ்குமார், ஊடகப்பிரிவுமாநில தலைவர் ரங்கநாயகுலு, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கே.எம்.சாய் சத்யன், தமிழக பாஜக மருத்துவ பிரிவின் மாநில செயலாளர் எஸ்.குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் நாச்சிகுளம் சரவணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.