சிரஞ்சீவி ஒரு சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் காணொளி ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த காணொளி ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது. ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது. என்ன நடக்கும் ? காலம் தான் அந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். இந்த இருளை எதிர்கொள்ள முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு நாயகன் உதயமாகிறான். ஒரு இளம் பெண் வரவிருக்கும் போரைப் பற்றி அறிய முற்பட்ட உடனேயே, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு சூப்பர் ஹீரோவைப் போல, பறக்கும் குதிரையில் சவாரி செய்கிறார். டீஸர் சிரஞ்சீவியின் அதிரடி காட்சிகளைக் காட்டுகிறது, இது ஒரு சக்திவாய்ந்த தருணத்தில் முடிவடைகிறது, அங்கு அவர் தனது எதிரிகளுக்கு எதிராக ஒரு சூலாயுதத்தைப் பயன்படுத்துகிறார், இது அவருக்கு வழிகாட்டும் தெய்வீக வலிமையைக் குறிக்கும் ஹனுமான் சிலையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு: எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ் இசை: எம்.எம்.கீரவாணி ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ் லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ