கனடாவில் நான்கு நூல்களையும் ஒரு பாடல் இசைத்தட்டு ஆகியவற்றை ஒரே மேடையில் வெளியிட்டு வைத்த எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்கள்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் எழுத்தாளரும் கவிஞரும் விமர்சகருமான அகணி சுரேஸ் அவர்கள் தனது நான்கு நூல்களான  இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்.  பனிதரும் அழகு. ‘Forever With Her’  என்னும் ஆங்கில சிறுகதைத் தொகுதி மற்றும் நளனோடு தமயந்தி ஆகிய நான்கு நூல்கள் மற்றும்  ஒரு பாடல் இசைத்தட்டு ஆகியவற்றை ஒரே மேடையில் வெளியிட்டு வைத்து கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் வாசகர் என அனைத்து தரப்பினரும் கூடியிருந்த மண்டபத்தில் அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றார்.

எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்கள் அகணி சுரேஸ் அவர் தொழில்ரீதியாக ஒரு குடிசார் பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1210-2-24 அன்று சனிக்கிழமையன்று  பிற்பகல்  1.30 தொடக்கம்  ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல்களின் வெளியீட்டு விழாவை கனடாக் கவிஞர் கழகத்தின் தலைவர் குமரகுரு கணபதிப்பிள்ளை அவர்கள் தொகுத்து வழங்கினார். கனடாக் கவிஞர்கள் கழகம்- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் மற்றும் சில இலக்கிய அமைப்புக்கள் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இந்த வெளியீட்டு விழாவில் வாழ்த்துரைகள்- வெளியீட்டு உரைகள்- ஆய்வு உரைகள் ஆகியனவும் பலரால் ஆற்றப்பெற்றன.

அங்கு உரையாற்றிய பேராசிரியர்  இ . பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில்  எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் பன்முக ஆற்றலையும் தொடர்ச்சியாக இயங்கும் பண்பையும் நட்பு பாராட்டும் தன்மையையும் விபரித்து உரையாற்றினார்.  ‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.’ என்னும் வள்ளுவனின் இரட்டை வரிகளுக்கு கனடா வில் உதாரண புருசனாக வாழ்ந்து வருபவர்தான்  அகணி சரேஸ் என்னும் அவர் புகழாரம் சூட்டினார். இ . பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றிய பின்னர் பலர் அங்கு தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள். மேற்படி விழாவில் கனடாவின் மத்திய அரசு அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி- மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோரின் சார்பில் பாராட்டுப் பத்திரங்கள் அங்கு வாசித்து எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களிடம் கையளிக்கப்பெற்றன.

அன்றை நூல் வெளியீட்டு விழாவான முற்றிலும் இலக்கிய நயமும்  செழுமையும் நிறைந்த ஒரு விழாவாகவும் சங்கத்தமிழின்  பெருமையையும் சங்க காலத்தின் எமது மொழியின் பரம்பலையும் நெறியையும் காத்துநின்று பின்னர் எதிர்காலப் பரம்பரைக்காக கையளித்தவர்களை போற்றுகின்ற ஒரு விழாவாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது. இங்கு காணப்படும் படங்கள் அன்றையஎழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் விழாவில் எடுக்கப்பெற்றவையாகும்.