தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (21.10.2024) சென்னை முகாம் அலுவலகத்தில், ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் அகாடெமியில் நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அரசு இணைந்து நடத்தியதொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்று திரும்பிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த15 பேராசிரியர்களிடம் பயிற்சி குறித்து கலந்துரையாடியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சிபெற்ற கல்லூரி பேராசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சான்றிதழை தமிழ்நாடு துணை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துபெற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர தமிழ்நாட்டு மாணவர்கள்உயர்கல்வியில் உலக அளவில் முன்னேறவும், உலகில் உள்ள முன்னணிநிறுவனங்களில் பணிபுரியும் நிலையை தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் உள்ளபள்ளிகளில் பயிலும் சாதாரண ஏழை, எளிய மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் உருவாக்கவும் தொலைநோக்கு பார்வை கொண்ட நான் முதல்வன் திட்டத்தைதொடங்கி செயல்படுத்தி வருகின்றார்கள். இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இருந்து நான் முதல்வன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்கள், பெர்த்தில் உள்ள பீனிக்ஸ் அகாடெமியில் நடைபெறும் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு (TAE40122) சான்றிதழ் IV (TAE40122) தீவிர தொழிற்கல்வி பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) 2024பிப்ரவரியில் சான்றிதழ் மற்றும் மதிப்பீட்டு அமைப்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை (TNSDC) அங்கீகரித்துள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின் சிறப்பு முயற்சியான நான் முதல்வன் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். புதிய திறன் படிப்புகள் மற்றும் தொழிற்துறையின் தேவையை பூர்த்தி செய்வதற்கான தகுதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயிற்சியானது, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மூன்று தொகுதிகளாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு, பெர்த்தில் தற்போது முதல் தொகுதி நடைபெற்று முடிந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்ற கல்லூரிபேராசிரியர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் முதன்மை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் துணை முதலமைச்சரின் கூடுதல் தலைமைச்செயலாளர் பிரதீப் யாதவ், இ,ஆ.ப., சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னொசென்ட் திவ்யா, இ.ஆ.ப., மேற்கு ஆஸ்திரேலியா அரசு பிரதிநிதி விமலா சீனிவாசன், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் திட்ட இயக்குநர் சாந்தி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஜெயசுதா, தமிழ்நாடுதிறன் மேம்பாட்டு கழகம் மற்றும் நான் முதல்வன் திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.