சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன், பூமிகா செளவாலா, நட்டி நட்ராஜ், வி.டி.வி.கணேஷ், சீதா, சரண்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “பிரதர்”. சட்டக்கல்லூரி மாணவன் செயம்ரவி நேர்மையாக நடந்து கொள்வதால் பலருக்கு இடஞ்சலாக இருக்கிறார். ஊரோடு ஒத்துப்போக கற்றுக் கொடுக்கிறேன் என்று கூறி அவரது அக்கா பூமிகா, ஜெயம்ரவியை ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார். அக்காவின் மாமனார் ஊட்டி மாவட்ட ஆட்சியர். அக்காவின் கணவர் நட்டி நட்ராஜ் வனத்துறை உயர் அதிகாரி. அங்கேயும் ஜெயம் ரவி நேர்மையாக நடந்து கொள்வதால் பெரும் பிரச்சினைகளை சந்திகிறார்கள். அதனால் மாமனாரையும் கணவரையும் பகைத்துக் கொண்டு தம்பி ஜெயம்ரவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கே வந்து விடுகிறார்கள். பிரிந்துபோன குடும்பத்தை ஜெயம் ரவி ஒன்று சேர்த்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. படத்தின் முன்பகுதியில் விளையாட்டுப் பிள்ளையாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, படத்தின் பின்பகுதியில் குடும்பத்திற்காக அவமானங்களை தாங்கிக்கொள்ளும் காட்சியில் அற்புதமாக நடித்துள்ளார். வி.டி.வி.கணேஷைன் நகைச்சுவை படத்தை தொய்வில்லாமல் நகர்த்துகிறது. நட்டி நட்ராஜ் நடிப்பிலும் உடல் வளர்ச்சியிலும் மெருகேறியிருக்கிறார். பாசத்திற்காக பூமிகா ஏங்குவது உள்ளத்தை தொடுகிறது. பாடல்கள் பார்வையாளர்களை தாளம்போட வைக்கிறது. குதுகலமான ஒரு குடும்ப கதையை இயக்குநர் தந்துள்ளார். சரண்யாவின் வித்தியாசமான நடிப்பை இப்படத்தில் காணலாம்.