முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடைசெய்ய வலியுறுத்தி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அப்படத்தை தயாரித்த ராஜ்கமல் இண்டர்நேசனல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது ரஷீத், அஸ்கர் அலி மற்றும் சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக முற்றுகையில் ஈடுபட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.