MSME துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற வாங்குவோர் – விற்போர் சந்திப்பில் 1.36 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

கோயம்புத்தூர், கொடிசியாவில் நடைபெற்ற வாங்குவோர் விற்போர் சந்திப்பின் நிறைவு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது “ தொழில் நகரமாம் கோவை மாநகரில் நேற்றும், இன்றும் வாங்குவோர் – விற்போர் சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 15 வெளிநாடுகளில் இருந்து 28 கொள்முதல் செய்பவர்களும் 231 MSME தொழில் முனைவோர்களும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பில் 43 MSME நிறுவனங்களிடம் இருந்து 1.36 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கொள்முதல்கள் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 85 ஆயிரம் அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்துக்கு, 17 முதல் முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. MSME தொழில் நிறுவனங்கள், நாட்டின் பொருளாதார வளச்சிக்கு அடித்தளமாகவும், அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும், கிராமப்புர பொருளாதார மேம்பாட்டிற்கும், பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. MSME தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில் முனைவேர்கள் தடையின்றி கடன் பொறுவதற்கு “தமிழ்நாடு கடன்
உத்திரவாத திட்டம்”விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான நிலுவைத் தொகையினை வங்கிகள் மூலம் கடனாக பெற்றிட “TN-TReDS” திட்டம்.கிராமப் பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திட “Micro Clusters” திட்டம்.. MSME நிறுவனங்கள் உலகத்தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்ய “Mega Clusters” திட்டம், வேளாண் விலை பொருட்களுக்கு நல்ல விலைக் கிடைத்திட தமிழ்நாடு உணவுப்பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் TNAPEx, .மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பட்டியலின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், துப்புரவு தொழிலாளர்களையும் தொழில்முனைவோர்களாக உருவாக்க துப்புரவு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம், சிட்கோ தொழில் மனை வாங்க கடன் உதவி, சிட்கோ வரலாற்றிலேயே முதல் முறையாக தொழில் மனைகளின் விலையை 5 % முதல் 75 % வரை குறைக்கப்பட்டது, தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சிட்கோ
தொழில் மனைகளுக்கு பட்டா, அரசு தொழிற்பேட்டைகளில், புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள்,தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள். கிராமப்புறங்களிலும் புத்தொழில்களை வளர்த்திட வட்டார புத்தொழில் மையங்கள், பள்ளி மாணவர்களிடையே புதிய கண்டுப்பிடிப்புகளை ஊக்குவித்து அவர்களை தொழில் முனைவேராக உருவாக்கிட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம், இந்த வரிசையில் வெளிநாட்டு தொழில்முனைவோர்களை அழைத்து வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்திய MSME அரசு செயலாளர் அர்ச்சனாபட்நாயக் I.A.S, தொழில்ஆணையர் இல. நிர்மல்ராஜ், I.A.S, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார் பாடி I.A.S, தொழில் வணிக கூடுதல் ஆணையர் சிவசௌந்திர வள்ளி I.A.S, FaMe-TN அலர்களுக்கும் மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கும் எனது பாரட்டுகளையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.