(15.11.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடனானஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர், பெருநகரசென்னை மாநகராட்சிக்குட்பட். காமராஜர் சாலையில் வாலாஜா சாலை போக்குவரத்து சந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச்.சாலையில் இருந்து பெரியார் சாலை வரையிலும், சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம்முதல் அண்ணா சாலை சந்திப்பு வரையிலும், காந்தி மண்டபம் சாலையில் அண்ணாநூற்றாண்டு நூலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரையிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன்சாலையில் சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரையிலும், கிரீன்வேஸ்சாலையில் ஃபோர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க. பாலம் வரையிலும் உள்ள பேருந்துபோக்குவரத்து சாலைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய்வது மற்றும்உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்துதுறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், மருத்துவர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.சிவகுமார் (எ) தாயகம் கவி, ஆர்.டி.சேகர், த.வேலு, இ.பரந்தாமன், ஜெ.கருணாநிதி, டாக்டர் நா.எழிலன், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கே.பி.சங்கர், ஜோசப் சாமுவேல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உ ஷா, இ,ஆ,ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ,ஆ,ப., சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஷ்ரா, இ,ஆ,ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ,ஆ,ப.,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், துணை மேயர் மு.மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.