சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. (22.11.2024) சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.சந்தரமோகன் B, இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் பேசுகையில்,
சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்ஆகியவற்றின் பிரிவுகள், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள்குறித்து உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சுற்றுலா திட்டபணிகள் விழாக்கள் குறித்தம், மாவட்டம் வாரியாக உள்ள சுற்றுலா அலுவளர்களிடம் சுற்றுலா தளம் சிறப்பு அம்சம் குறித்தும்,நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்தும், மேலும், புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்குவதற்கான வழிமுறையை ஆராயவும் மற்றும் சுற்றுலா தலங்கள் அமைக்க மற்ற துறைகளிடமிருந்து தடையில்லா சான்று பெறுவது குறித்தும், New Development Bankமூலம் சுற்றுலாவிற்கான முக்கிய இடங்களை தேர்ந்தெடுத்து புதிய சுற்றுலா தளங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும்,கடற்கரை சுற்றுலா மேம்படுதுவது குறித்தும், பிரபலம் அடையாத சுற்றுலா தளங்களை பிரபல படுத்த புதிய திட்டங்கள் வகுத்தல் குறித்தும் மற்றும் புதிய இடங்களில் ROCK CLIMBING என்ற சொல்லக்கூடிய சாகச சுற்றுலா, VIRTUAL TOURISM, ONLINE PLATFORMகளை பிரபல படுத்துவது குறித்தும், மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்கள் கொண்டுவருவது குறித்தும் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல்கள், படகு இலங்கள் மற்றும்சுற்றுலா குறித்தும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால்சுற்றுலா வளர்ச்சிக்காக 1971 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு குழாம்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி மேற்கொள்ள சேவை அளித்து வருகின்றது. 3 தொலைநோக்கி இல்லங்களையும் செயல்படுத்தி வருகின்றது. மேலும் 5 வால்வோ சொகுசு போருந்துகள், 6 அதிநவீன சொகுசு பேருந்துகள், 3 சிறிய ரக சொகுசு பேருந்துகள்என 14 பேருந்துகள் மூலமாக புகழ்பெற்ற திருப்பதி சுற்றுலா, மாமல்புரம் சுற்றுலா, வெளிமாநில சுற்றுலா பயணிகளின்விருப்பமான 8 நாட்கள் தமிழ்நாடு சுற்றுலா உள்ளிட்ட 52 வகையான சுற்றுலா பயணத்திட்டங்களை செயல்படுத்தி குறைந்தசெலவில் பொதுமக்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளசேவையாற்றி வருகின்றது.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஓட்டல் தமிழ்நாடுஉணவகங்களுக்கு அமுதகம் என்று பெயர் சூட்டி உணவகங்கள்சுற்றுலா பயணிகளுக்கு எளிதில் அடையாளம் காணச்செய்துள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் இலட்சிய இலக்கினை அடைய சுற்றுலாத்துறையின் பங்களிப்பு முதன்மையாக இருக்கும் வகையில் பணியாற்றிடுவோம்” என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவுரித்தினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகபொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ப.புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.