ராஜன், நீலா தயாரிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, யோகி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன். எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதனன், ரோபோ சன்கர், ரெடின் கிங்ஸ்லி, அபிராமி, மடோனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜாலியோ ஜிம்கானா”. அரசியல்வாதி மதுசூதனனினாள் பாதிக்கப்பட்ட அமிராமி தனது மூன்று மகளுடன் பொதுநல வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்கிறார். ஆனால் அங்கு அவர் இறந்து கிடக்கிறார். திடீரென பிரபு தேவாவின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி வரவு வருகிறது. அந்த 10 கோடி ரூபாவை கைப்பற்ற அமிராமியும் அவரது மூன்று மகள்களும் திட்டமிடுகிறார்கள். அதற்கு இறந்து கிடக்கும் பிரபு தேவாவை உயிர் உள்ளவர்போல் நடிக்க வைக்கிறார்கள். அந்த 10 கோடி ரூபாவை கைப்பற்றினார்களா? இல்லையா? என்பதுதான் கதை. மூலவியாதியால் அவதிப்படும் பாதிரியார் யோகிபாபுவிடம் மடோனா பாவமன்னிப்புக்காக உரையாடுவதிலிருந்து படத்தின் கதையை ஆரம்பிக்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம். பிரபுதேவா படம் முழுவதும் பிணமாகவே நடித்திருக்கிறார். இது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பிரபு தேவாவின் பொம்மலாட்ட சண்டைக்காட்சி ரசிக்கும்படி உள்ளது. எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டுள்ளது. அமிராமி, மடோனா ஆகியோரின் நடிப்பு மெச்சத்தகுந்தது. யோகிபாபு அவரின் வழக்கமான நகைச்சுவையை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு இசை மிகவும் பக்கபலமாக துணை செய்திருக்கிறது. மூலக்கதைக்கு சில்லரை துணைக்கதைகளை அதிகம் இணைத்துள்ளார் இயக்குநர் சக்தி சிதம்பரம். உச்சக்கட்ட காட்சி விருவிருப்பாக இருக்கிறது