தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (23.11.2024) திருச்சி மாவட்டம், துறையூரில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், இரா. மாணிக்கம், எம்.பிரபாகரன், துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் மு.அன்பழகன் (திருச்சி), மாவட்ட செயலாளர்கள் க.வைரமணி ( திருச்சி மத்தியம்), வீ.ஜெகதீசன் (பெரம்பலூர்), கே.கே.செல்லபாண்டியன் (புதுக்கோட்டை வடக்கு) கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.