திரை விமர்சனம் பற்றி முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி

எஸ்.ஆர்.ட்ரீம் ஸ்டுடியோ  சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் டி.சமய முரளி, திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின்  இடை வெளியீட்டு விழா, நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  பேசியதாவது:  இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். அருமையான படம்.  இப்படத்திற்கு இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால் சினிமா இசை ஆர்வத்தில் தொடர்ந்து முயன்று, இசையமைப்பாளராக மாறியுள்ளார். வாழ்த்துக்கள். இயக்குநர் கணேஷா பாண்டி மிக  நன்றாக இயக்கியுள்ளார். அதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிக மிகக் கடினம். அதை நன்றாகச் செய்துள்ளார். இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச்  சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் காட்சியில் கூட்டம்  வரவில்லை எனும் போது அடுத்த காட்சி காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வர வில்லையெனில் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர்  முறையாகப் பேசி  முடிவெடுக்க வேண்டும்.*******

உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்ட  ஒருவன் இருக்கும் படத்தில், தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம்  ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட்.  இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார். மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையராக பனியாற்றி வரும் திரு T சமய முரளி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  “சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.  SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.

*தொழில்நுட்ப வல்லுநர்கள்  விபரம்*  இயக்குநர்:  கணேஷா பாண்டி  தயாரிப்பாளர்: S.ராம் பிரகாஷ்  இசையமைப்பாளர்: T சமய முரளி  பின்னணி இசை :  ரவி K பாடல் இசை : T சமய முரளி  பாடல் : T சமய முரளி  பாடியவர் : T சமய முரளி, K S  சித்ரா, பிரியங்கா, ஶ்ரீனிஷா ஜெயசீலன், நித்ய ஶ்ரீ, கானா ஃபிரான்ஸிஸ் ஒளிப்பதிவாளர்: சேயோன் முத்து படத் தொகுப்பாளர்: சரண் சண்முகம் மக்கள் தொடர்பு – ஹேமானந்த்

இயக்குநர் கணேஷா பாண்டி பேசியதாவது… சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும். ராம் பிரகாஷ் சார் இந்த வாய்ப்பிற்கு நன்றி சார். பத்திரிக்கையாளர்கள் இந்த சைலண்ட் படத்திற்கு ஆதரவு தந்து தூக்கி விட வேண்டும். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என் பெற்றோர் இன்று உயிருடன் இல்லை. உங்கள் அனைவரையும் என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன் நன்றி.