“ஃபேமிலி படம்” திரைப்படம் விமர்சனம்

கே.பாலாஜி தயாரிப்பில் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்‌ஷா, ஶ்ரீஷா ரவி, பார்தீபன்குமார், மோகனசுந்தரம், அரவிந்த் ஜானகிராமன், ஆர்ஜே பிரியகா, சந்தோஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஃபேமிலி படம்”. உதய் கார்த்திக் ஒரு கதையை எழுதி அதை இயக்க ஒரு தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போடுகிறார். கதையை பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர், இறுதியில் உதய் கார்த்திக்கை ஏமாற்றி விடுகிறார். வழக்கறிஞராக இருக்கும் உதய் கார்த்திக்கின் அண்ணன் பிரசன்னா,  “நாமே சொந்தமாக ஒரு படத்தை தயாரிப்போம்” என்று கூறுகிறார். சொந்தமாக படம் தயாரித்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை. நடுத்தர குடும்பத்தினர் ஒரு திரைப்படம் தயாரிக்க எவ்வளவு கஷ்டங்களையும் அவமானங்களையும் எதிர் கொள்ள வேண்டும் என்பதை ஒரு காவியம்போல் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் செல்வகுமார் திருகுமாரன். இயக்குநராக நடித்திருக்கும் உதய் கார்த்திக் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் எதிர் கொள்ளும் காட்சிகளில் அபாரமாக தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திரைப்பட ஊழியர்களுக்கு படிச் செலவு கொடுக்க பணம் இல்லாத நேரத்தில் தாத்தாவாக நடித்திருக்கும் மோகனசுந்தரம், “கடைசி காலத்தில் என்னை எடுக்க யாரும் கஷ்ட்டப்படகூடாது என்பதற்காக என் பென்ஷன் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணம் 3.5 லடத்தை பிரசன்னாவிடம் கொடுத்து ஊழியர்களுக்கு படிச்செலவுக்கு கொடுக்க சொல்கிறார். அதை வாங்கும் போது முகம் இறுகிப்போவதை பிரசன்னா தத்ரூபமாக வெளிப்படுத்திருப்பது நம் மனதை கவ்வுகிறது. “கடைசி காலத்தில் உன்னை எடுக்க நாங்கயெல்லாம் இல்லையா தாத்தா” என்று பிரசன்னா கூறும் காட்சியில் அவர் கண் தானேகவே கலங்கி நீர் வடிந்து விடுகிறது. இந்த காட்சியில் அவர் நடிக்கவில்லை. உண்மையாகவே அழது விடுகிறார். இசை ஒளிப்பதிவு எல்லாம் படத்திற்கு பக்கபலமாக உதவியிருக்கிறது. குறைந்த பொருட் செலவில் உருவான அழகான திரைப்படத்தை தந்த இயக்குநர் பாராட்டுதலுக்குறியவர்