உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (7.12.2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்டகுளம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டம்,  மேல்விஷாரம் நகராட்சியில்  பொதுமக்களுக்கு மருத்துவசேவையை எளிதில் வழங்குவதற்காக   ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30 படுக்கைகள் மற்றும் நுழைவு கூடம், காத்திருப்பு கூடம், மருந்தகம்,  ஊடு கதிர் பிரிவு, ஸ்கேன்,  பிரசவ அறை,  அறுவை சிகிச்சை அறை, பச்சிளம் குழந்தைகளுக்கான அறை, இரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.  மேலும் வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 35.66 இலட்சம் ரூபாய் மற்றும் ROUND TABLE INDIA  மூலம் 17.84 இலட்சம் ரூபாய்  எனமொத்தமாக  53.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடம், நகராட்சி இருபாலர் நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 70 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடம், வாலாஜாபேட்டை நகராட்சிமார்கெட் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடம் ஆகிய பள்ளிக் கட்ட்ங்களையும் திறந்துவைத்தார்.

         வாலாஜாபேட்டை நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் 2.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பேருந்து நிலைய மேற்கூரை இராணிப்பேட்டை சட்டமன்றஉறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வாலாஜாபேட்டை வாலாஜாபேட்டை பேருந்துநிலையத்தை  துணை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் வாலாஜாபேட்டை நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள பூண்டி சாமியார் குளத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்அவர்கள் மொத்தம் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற  வளர்ச்சி திட்டப் பணிகளைதிறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் லட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணைத் தலைவர்கள் கமலராகவன், குல்ஜார் அஹமது மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.