விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, முதல்நிலை காவலர் B.வினோத் (மு.நி.கா.30336) என்பவர்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பு அதிவிரைவுப் படை (Special Action Group) பிரிவில்பணிபுரிந்து வருகிறார்.  (13.12.2024) காலைவிருகம்பாக்கம், நடேசன் தெரு பகுதியில்பணியிலிருந்த போது, அருகில் உள்ள கூவம் ஆற்றில்சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்துள்ளார். பெண்ணின் சத்தம்கேட்டு அருகில் பணியிலிருந்த காவலர் வினோத்விரைந்து செயல்பட்டு, அருகிலிருந்த JCBயைவரவழைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தமேற்படி பெண்ணை JCB உதவியுடன் மீட்டு முதலுதவிஅளித்துள்ளார். விசாரணையில் கூவம் ஆற்றில் தவறிவிழுந்த பெண் தேவி, வ/40, க/பெ.சக்திவேல், அம்மன்கோயில் தெரு, நெற்குன்றம், அம்பத்தூர், திருவள்ளூர்மாவட்டம் என்பது தெரியவந்தது. தேவியின்உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். உயிருக்கு போராடிய பெண்ணை துணிச்சலாகசெயல்பட்டு தக்க சமயத்தில் காப்பாற்றிய காவலரைஅங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாரட்டினர்.          

 கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்குபோராடிக்கொண்டிருந்த பெண்ணை தக்க சமயத்தில்காப்பாற்றி முதலுதவி அளித்த முதல் நிலை காவலர் (மு.நி.கா.30336) B.வினோத்தை சென்னைபெருநகர காவல் ஆணையாளர்  A.அருண், இ.கா.ப.,  (13.12.2024) நேரில்அழைத்து வெகுவாகப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.