என்னுடைய பாடசாலை வாழ்வை பற்றி படமெடுக்க வேண்டும் – நடிகர் யோகி பாபு.

குவண்டம் பிலீம் பேக்ட்ரி  நிறுவனம் சார்பில் ஆர்.கே.வித்யாதரன் தயாரித்து இயக்க,  யோகிபாபு நடிப்பில், இளையராஜா இசையில், உருவாகியுள்ள திரைப்படம் “ஸ்கூல்”. இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் யோகிபாபு பேசியதாவது: மிகவும் சந்தோசமாக இருக்கிறது. “ஸ்கூல்” இந்தப்படத்திற்கு முதலில் வித்யாதரன் சார் என்னைக் கூப்பிடும்போது, பியூன் கதாபாத்திரத்துக்குத்தான் கூப்பிட்டார். வாத்தியார் கதாபாத்திரத்திற்கு ஆள் வரவில்லை என்று நினைக்கிறேன், என்னை வாத்தியார் ஆக்கிவிட்டார். நான் படித்ததெல்லாம் அரசு பாடசாலையில்தான். நான் படிச்ச பாடசாலையின் கதையைப் படமாக்கவேண்டுமென, பல ஆண்டுகளாக முயற்சித்து  வருகிறேன். வித்யாதரன் சார் மனது வைத்தால், கண்டிப்பாக அதைப் படம் செய்துவிடலாம்.********

தாமு அண்ணன் வந்துள்ளார். அவரைப் பார்த்துத் தான் நானெல்லாம் நடிக்க வந்தேன், அவரோடு நடிக்க ஆசை, அண்ணா மீண்டும் நடிக்கலாம். இளையராஜா சார் என்றுமே அவர் தான் ராஜா. மிக அருமையான இசையைத் தந்துள்ளார்.  அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர்,  இயக்குநர் R K வித்யாதரன் பேசியதாவது… இந்த ஸ்கூல் திரைப்படம்,  ஒரு அழகான கதை. ஒரு படைப்பாளிக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் போது, புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும். அந்த எண்ணத்தில் தான் இந்த குவாண்டம் புரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்தோம். இந்த வித்தியாசமான  கதையில்  யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, அனைவரது சாய்ஸாகவும் யோகிபாபு தான் இருந்தார். ரொம்ப சிம்பிளாக சின்ன சின்ன விசயங்களைக் கடத்துபவர்கள், பெரிய விசயங்களைச் சொல்லும்போது பெரிய அளவில் சென்றடையும். இப்படத்தில் அவர் டீச்சராக நடித்துள்ளார். பூமிகா மேடம் கண்டிப்பான டீச்சராக நடித்துள்ளார். என் குரு கே.எஸ் ரவிக்குமார் சார் நடித்துள்ளார். நிழல்கள் ரவி, சாம்ஸ், பிரியங்கா என பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ளனர். உண்மையான ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் ஸ்டூடண்ட்ஸாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை, ஒரே ஒரு தடவை தான் இசைஞானி பார்த்தார் ஆனால் சின்ன சின்ன டயலாக்குகளை கூட உன்னிப்பாக கவனித்து மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர் இசை இப்படத்திற்கு புதிய வடிவம் தந்துள்ளது. தாமு என் நீண்ட நாள் நண்பர். மாணவர்களுக்காகப் பல நல்ல விசயங்கள் செய்து வருகிறார், அவர் இவ்விழாவிற்கு வந்ததற்கு நன்றி.  ஒரு சின்ன எண்ணம் தான் எல்லாவற்றிக்கும் காரணம் அந்த மூலகாரணம் எனும் ஐடியாவை வைத்துத் தான் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். கண்டிப்பாக இப்படம் ஒரு டிரெண்ட்செட்டராக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.