தமிழ்நாட்டின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இவ்விருதுகளைப் பெற தகுதியுடையவர்கள்
• ஒவ்வொரு விருதும் ரூ.2 இலட்சம் ரொக்கப்பரிசு, பரிசுக்கோப்பை மற்றும் நற்சான்றிதழை உள்ளடக்கியது
சென்னை: 21 டிசம்பர் 2024: சமூகசேவை மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பை தனது குறிக்கோளாக கொண்டு சிறப்பாக இயங்கி வரும் ஒரு புகழ்பெற்ற அமைப்பான ராஜஸ்தானி சங்கம் – தமிழ்நாடு (சங்கம்) ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் என்ற புதிய திட்டம் தொடங்கப்படுவதை இன்று பெருமையுடன் அறிவித்திருக்கிறது. சென்னையில் இன்று நடைபெற்ற இதன் தொடக்கவிழா நிகழ்வில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் திரு, C. சரவணன் மற்றும் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயலாக்க அதிகாரி திரு. சாந்திலால் ஜெயின் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விருதுகளுக்கான வகையினங்கள்: விவசாயம் & ஊரக மேம்பாடு, பொது சேவைகள், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் & நிலைப்புத்தன்மை, தொழில்முனைவுத்திறன் &தொழில்துறை, சமூக நலம், ஊடகம் & தகவல்தொடர்பு , தமிழ்நாடு மாநிலம் மற்றும் அதன் மக்களின் நலவாழ்வில் அர்த்தமுள்ள வகையில் முன்னேறச் செய்திருக்கின்ற தனிச்சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதத்தில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. கீழ்வரும் எட்டு முக்கிய வகையினங்களில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன: விவசாயம் மற்றும் ஊரக மேம்பாடு, பொது சேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைப்புத்தன்மை, தொழில்முனைவுத்திறன் மற்றும் தொழில்துறை, சமூக நலம், ஊடகம் மற்றும் தகவல்தொடர்பு தமிழ்நாடு மாநிலத்தை முன்னேறுமாறு பணியாற்றியிருக்கின்ற தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் ஏற்படுத்தியிருக்கும் ஆழமான தாக்கத்தை இவ்விருதுகள் கௌரவித்துக் கொண்டாடுகின்றன.
துக்ளக் தமிழ் வாராந்திர இதழின் ஆசிரியரும் மற்றும் புகழ்பெற்ற சிந்தனையாளருமான திரு. S. குருமூர்த்தி தலைமையிலான நடுவர்கள் குழுவில் அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் புரொஃபசர் E. பாலகுருசாமி இந்து நாளிதழின் முன்னாள் தலைமையாசிரியரும், மூத்த பத்திரிக்கையாளருமான திரு, N. ரவி, பகவான் மகாவீர் அவார்ட்ஸ் அமைப்பின் நிறுவனரும், அறக்கொடையாளருமான திரு. N. சுகல்சந்த் ஜெயின் மற்றும் பத்மபூஷன் விருதாளரும், உலகளவில் புகழ்பெற்ற பரதநாட்டிய நிபுணருமான டாக்டர். பத்மா சுப்ரமணியம் ஆகிய பிரபல ஆளுமைகள் இடம்பெற்றிருக்கின்றனர்.
தலைமை விருந்தினரான மாண்புமிகு நீதியரசர் திரு. C. சரவணன் இந்நிகழ்வில் கூறியதாவது:
“தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்ற தமிழர்கள் மற்றும் ராஜஸ்தானிகள் என்ற இரு சிறப்பான சமூகங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமை உணர்வின் ஆற்றல்மிக்க குறியீடாக ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்விருதுகள், தனிநபர்களின் நேர்த்தியான பங்களிப்பை கொண்டாடுவதோடு நின்றுவிடாமல் மாநிலத்தின் முன்னேற்றம் மீது சேவையின் கூட்டு தாக்கத்தையும் முன்னிலைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் நல்வாழ்விற்கு வழங்கப்பட்டிருக்கும் சுயநலமற்ற பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் இவ்விருதுகள், சேவையின் பாதையை பிற நபர்களும் பின்தொடரவும், ஒற்றுமையை பேணி வளர்க்கவும், முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும் மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கவும் உத்வேகமளிக்கும்.”
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயலாக்க அதிகாரி திரு. சாந்திலரல் ஜெயின் தனது உரையில் கூறியதாவது:
“பல தலைமுறைகளாக, வர்த்தகம், கல்வி மற்றும் அறக்கொடை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி, தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் பொருளாதார செயல்தளத்தின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக இராஜஸ்தானி சமூகம் இருந்து வருகிறது. தமிழ்நாடு மாநிலத்தின் மக்களது வாழ்க்கையில் ஒரு மேம்பட்ட மாற்றத்தை உருவாக்குவதற்கு தனித்துவமான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்ற தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் மகத்தான முயற்சிகளை அங்கீகரிப்பதில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் என்பது, பாராட்டுதலுக்குரிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும். இந்த நபர்கள் மற்றும் அமைப்புகளின் அர்ப்பணிப்பு மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உத்வேகமளித்திருக்கின்ற சேவை உணர்வை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது.”
ராஜஸ்தானி சங்கம் தமிழ்நாடு – ன் தலைவர் திரு. பிரவீன் குமார் டாட்டியா கூறியதாவது:
“ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் என்பவை, சமுதாயத்தின் மீது நீடித்து நிலைக்கும் தாக்கத்தை உருவாக்குகின்ற நபர்களின் பணியையும், சேவையையும் கௌரவிக்கும் எமது நிலையான பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றிருக்கும் நடுவர்கள் குழுவால் தேர்வு செய்து வழங்கப்படவிருக்கும் இந்த கௌரவம் மிக்க அங்கீகாரம், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைமாற்றத்தை முன்னெடுக்கின்ற தனிநபர்களையும், அமைப்புகளையும் பாராட்டி கொண்டாடுகிறது, இத்தகைய பங்களிப்புகளை அங்கீகரிப்பதன் வழியாக, இன்னும் அதிக அளவிலான சேவை உணர்வை தூண்டுவதும், ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் மற்றும் ராஜஸ்தானி சமூகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுவாக்குவதும் எமது நோக்கமாகும்.”
ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் குழுவின் தலைவர் திரு, நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறியதாவது:
“50 ஆண்டுகளுக்கும் அதிகமாக இயங்கி வரும் இச்சங்கம், கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு ஆகியவற்றை முன்னெடுப்பதன் வழியாக மேம்படுத்தும் குறிக்கோளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள், இந்த செயல்நோக்கத்தை மேலும் முன்னெடுத்து செல்கின்றன; தமிழ்நாட்டின் நலவாழ்விற்கு தங்களது தளர்வில்லாத அர்ப்பணிப்பின் மூலம் அர்த்தமுள்ள. நேர்மறையான மாற்றத்தை உருவாக்குகின்ற நபர்களை இவ்விருதுகள் கௌரவிக்கின்றன. இவர்களின் இந்த முயற்சிகளை விருதுகளின் மூலம் அங்கீகரிப்பதன் வழியாக, சேவை மீதான எமது பொறுப்புறுதியை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம்; தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு பங்களிப்பை தொடர்ந்து வழங்க எதிர்கால தலைமுறையினருக்கும் இவை உத்வேகமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
2025 மார்ச் மாதம் முதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள், சமூக சேவையில் இச்சங்கம் கொண்டிருக்கும் நீண்டகால பாரம்பரியத்தில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல்லாகும். 1967-ம் ஆண்டில், நிறுவப்பட்டதிலிருந்து கலாச்சார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வலுவான தூணாகத் திகழும் இச்சங்கத்தால் நிறுவப்பட்டிருக்கும் இவ்விருதுகள், செயல்பாட்டில் நேர்த்தி, அனைத்து தரப்பினரும் பயன்பெறுமாறு ஒன்று சேர்ப்பது மற்றும் கூட்டு முன்னேற்றம் ஆகிய மதிப்பீடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
பல்வேறு துறைகளில் மிகச்சிறப்பான பணியை கொண்டாடுவதன் வழியாக, சமூக புத்தாக்கம், சமுதாய நலவாழ்வு, நிலைப்புத்தன்மையுள்ள முன்னேற்றம் போன்றவற்றிற்கு ஆதரவளிக்க தனிநபர்களையும் மற்றும் அமைப்புகளையும் ஊக்குவிக்கும். வெவ்வேறு சமூகங்களுக்கிடையே ஒத்திசைவை வலுப்படுத்துவதற்கும், எதிர்காலத்திற்கு ஒருங்கிணைந்த தொலைநோக்கு கண்ணோட்டத்தை பேணவும், சிறந்த செயல்தளமாகவும் இவ்விருதுகள் இருக்கும். இந்த மதிப்பீடுகளை தங்கள் செயல்பாடாக கொண்டிருக்கின்ற தனிநபர்கள் மற்றும் அமைப்புகள், அவைகளின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நபர்களை கொண்டாடவும் எங்களோடு இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வ தளங்களின் வழியாக, விண்ணப்பங்களை இப்போது சமர்ப்பிக்கலாம்; இதற்கான விரிவான வழிகாட்டல்கள் அவற்றில் வழங்கப்பட்டிருக்கின்றன.