மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் சரத்குமார் பேசியதாவது: “இந்தப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்தார். நன்றி. பிரவீன், ஷ்யாம் மேடையில் கூட ஒன்றாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்கு இது தான் சான்று. அவர்களுக்கு வாழ்த்துகள். ஒளிப்பதிவாளர் விக்ரம் திறமையானவர். எழுத்தாளர் ஆல்கெமிஸ் புத்திசாலி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை வெளியிடுகிறார். குழுவினர் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். நல்ல முயற்சி. சுரேஷும் நானும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.*********
எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டுப்தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாகியுள்ளது.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை இயக்குகின்றனர். திரைக்கதை வசனத்தை கமலா ஆல்கெமிஸ் எழுதியுள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ரவி பாண்டியன் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் செய்ய, புரடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை சதிஷ் செய்ய, மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ் AIM குழுவினர் செய்கின்றனர். விளம்பர டிசைன் பணிகளை ரிஷி செய்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.