ஹஜ் 2025 பயணத்துக்கான 2-வதுகாத்திருப்போர் பட்டியல் வெளியீடு

மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, ஹஜ் 2025  பயணத்துக்கான 2வது காத்திருப்புப் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,676 விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன .

ஜனவரி 10, 2025 அன்று  வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண். 25,ன்படி, இந்த விண்ணப்பதாரர்கள் ரூ 2,72,300/- (முதல் தவணை ரூ1,30,300/- மற்றும் இரண்டாவது தவணை ரூ 1,42,000/- ஆகியவற்றை உள்ளடக்கியது) ஜனவரி 23, 2025 அன்று அல்லது அதற்கு முன் டெபாசிட் செய்ய வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், சவூதி அரேபியாவில் விமானக் கட்டணம் மற்றும் செலவுகளை இறுதி செய்ததன் அடிப்படையில் மீதமுள்ள ஹஜ் தொகை (மூன்றாவது தவணை) விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.hajcommittee.gov.in இல் சுற்றறிக்கை எண். 25 கிடைக்கும் அல்லது அந்தந்த மாநில ஹஜ் கமிட்டிகளைத் தொடர்புகொள்ளவும். காத்திப்போர் பட்டியலில் தமிழ்நாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள எண்கள்- 1016 முதல் 1319 வரையாகும்.