தமிழ்சினிமா வரலாற்றில் புதிய மைல்கல்லாக உருவாகும் படம் “மர்மர்”

தமிழ்சினிமா வரலாற்றில் புதிய மைல்கல்லாக உருவாகும் படம்  மர்மர், முதல்முறையாக  படமாக உருவாகியுள்ளது. ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கிய இந்த படத்தை, பிரபாகரன் எஸ்.பி.கே.பிக்சர்ஸ் மற்றும் ஸ்டேன் அலோன் பிக்சர்ஸ் இண்டர் நேஷ்னல்  நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாக்கியுள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் முதல் பதாகை  ஒரு விருந்துக்கு சமமான நிகழ்வில் வெளியிடப்பட்டு, திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மர்மர் படத்தின் முதல் பதாகை தனது தனித்துவமான மஞ்சள் பின்னணியால் பார்வையாளர்களின் கவனத்தை உடனே ஈர்த்தது. அதில் “கபோ கபா கபிஸ்து” என்ற ரகசியமான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பதாகையின் வடிவமைப்பு, படத்தின் பயமூட்டும் அனுபவத்துக்கு சரியான மொகத்தை அமைத்துள்ளது.******