எக்ஸ்.பி.கிரியேஷன் தயாரிப்பில் விஷ்ணுவரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, சாத்குமார், பிரபு, ராஜா, ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா, அதிதி ஷங்கர், குஷ்பு சுந்தர், கல்கி கோய்ச்லின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நேசிப்பாயா”. ஆகாஷ் முரளியும் அதிதி ஷங்கரும் காதலர்களாக இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறார்கள். அதிதி ஷங்கர் வேலைக்காக போர்ச்சுக்கல் நாட்டுக்குச் செல்கிறார். அங்கு மிகப்பெறும் செல்வந்தரான சரத்குமார் – குஷ்புவின் மகன் ஜார்ஜ் கோராவை கொலை செய்ததாக போர்ச்சுக்கல் நாட்டு காவல்த்துறையினர் அதிதி ஷங்கரை கைது செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கிறார்கள். காதலி அதிதி ஷங்கரை காப்பாற்ற ஆகாஷ் முரளி போர்ச்சுக்கல்லுக்கு செல்கிறார். அதிதி ஷங்கரை ஆகாஷ் முரளி காப்பாற்றினாரா? சரத்குமாரின் மகனை கொலை செய்தது யார்?. என்பதுத்கான் கதை. மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் “நேசிபாயா”. மென்மையான காதல் மலரை, சூறாவளி காற்றில் சுழட்டுகிறார் இயக்குநர் விஷ்ணுவரதன். காதல் காட்சியிலும் சப்தமில்லாமல் அழுகின்ற காட்சியிலும் ஆகாஷ் முரளியின் நடிப்பில் அவரது தந்தை முரளியை காணமுடிகிறது. அவர் திரைவானில் துருவ நட்சத்திரமாக ஜொலிப்பார். அதிதி ஷங்கர் நடிப்பின் முதிர்ச்சியை பெற்றிருக்கிறார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை அதிதி ஷங்கர் தன் நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார். உச்சக்கட்ட காட்சியில் தனது தவிப்பயும் துடிப்பையும் யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார் அதிதி ஷங்கர். மகனை பறிகொடுத்த தவிப்பில் காளியாக கர்ஜிக்கும் குஷ்புவின் நடிப்பு அபாரம். சரத்குமாரின் காதோரம் சென்று, வேதனையில் எரிந்து வெந்து தணிந்த ஒரு புன்சிரிப்பை குஷ்பு காட்டுவது நடிப்பின் உச்சம். அடாவடி தனத்தில் மட்டும் வில்லத்தனம் இல்லை, அமைதியிலும் அதைக் காட்ட முடியும் என்பதை ராஜாவும் சரத்குமாரும் நிரூபித்திருக்கிறார்கள். வழக்கறிஞராக வரும் கல்கி கோய்ச்சலின் ஆகாஷ் முரளியுடன் அடிக்கும் லூட்டியில் கல்லாகட்டுகிறார். உச்சக்கட்ட காட்சியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை காட்டி படத்தை முடித்திருக்கும் இயக்குநர் விஷ்ணுவரதன் பாராட்டுதலுக்குறியவர். மதிப்பீடு 5க்கு 3.5.