விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் படம் “மருதம்”

அருவர் ப்ரைவேட் லிமிடெட்  சார்பில் சி.வெங்கடேசன்  தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.  விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பதாகை, தமிழர் நிலத்தின் கொண்டாட்டமான பொங்கலையொட்டி வெளியிடப்பட்டது. இப்படத்தில் முதன்மை கதாப்பத்திரத்தில் விதார்த் நடித்துள்ளார். ரக்‌ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கதைக்களம் நடப்பதால் அப்பகுதியைச் சுற்றி இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.*******

இப்படத்திற்கு N R ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அருள் சோமசுந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்துரு B படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை நீதி எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை A ராஜா கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் காணொளி பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். விவசாயம் ஆதி குடியின் முதல் தொழில், நிலத்திற்கும், மண்ணுக்கும், விவசாயிக்கும் இடையிலான உறவு தான், மற்ற அனைத்து உறவுகளை விடவும் முதன்மையானது. இன்றைய காலகட்டத்தில் ஒரு விவசாயி சந்திக்கும் பிரச்சனைகளை, கைவிட்டுப்போகும்  அவனது நிலத்திற்கும் அவனுக்குமான உறவை, சமூக அக்கறை மிக்க அழுத்தமான  படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.