நியூசிலாந்தில் ’கண்ணப்பா’ படத்தை படமாக்கியது ஏன்? – நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சுகண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன்பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு மஞ்சு பேசும்போது, “கண்ணப்பா” படத்தை நியூசிலாந்தில் படமாக்க காரணம் என்ன? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். கண்ணப்பா கதை 3 வது நூற்றாண்டில் நடக்கிறது. அந்த காலக்கட்டத்தில் நீர், காற்று, வனம் என அனைத்தும் எவ்வளவு பசுமையாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். கண்ணப்பா கதையை என்னிடம் கொடுத்தவருக்கு தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால், நான் அந்த கதையை விரிவுப்படுத்தி எழுதியதோடு, படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய தொடங்கி விட்டேன். உலகின் பலநாடுகளுக்கு சென்று பார்த்த போது, நியூசிலாந்து நாடுதான் சரியான இடமாக இருந்தது. கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது நியூசிலாந்து தான். நம் நாடும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்திருக்கும், ஆனால் நாம் அதை இப்போது கெடுத்து விட்டோம். கண்ணப்பா படத்தின் கதை அப்படி ஒரு இடத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினேன், அதனால்தான் அங்கு படப்பிடிப்பு நடத்தினேன். படத்தில் நீங்கள்பார்க்கும் போது கிராபிக்ஸ் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் படத்தில் இடம்பெறும் இடங்கள் அனைத்தும் உண்மையானவை. அந்த அளவுக்கு நீர், வனம் என அனைத்தும் மிக அழகாக இருக்கும்.” என்றார்.*******

மேலும், கண்ணப்பா யார்? என்ற ஆரம்பக் கதையைகாமிக்ஸாக படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டுதொகுப்புகளாக இதுவரை 80 ஆயிரம் பிரதிகள்வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் மூன்றாவதுதொகுப்பையும் வெளியிட இருப்பதாகவும், கண்ணப்பாகாமிக்ஸுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு, நிச்சயம் படத்திற்கும் கிடைக்கும், என்று விஷ்ணு மஞ்சு தெரிவித்தார்.

பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வரரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர்  கதை எழுத, விஷ்ணுமஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ்ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த்இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகபணியாற்றியிருக்கிறார். ஸ்டீபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்றுபாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.  வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியாதிரைப்படமாக வெளியாக உள்ள ‘கண்ணப்பா’திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜனவரி 18 ஆம்தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழு கலந்துக்கொண்டு படம் பற்றியசுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்களுக்கு காலை வணக்கம். இந்த படத்தை பற்றிசொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்தகாலக்கட்ட தலைமுறைக்கு சரித்திரம், இதிகாசங்களைநினைவுப்படுத்த வேண்டும், கண்ணப்பாவை ஒரு கதை என்றுநினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம், அதைப் பற்றிநிச்சயம் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும், என்று இயக்குநர்சொன்னார். அது தான் இந்த படத்திற்கும், தற்போதையதலைமுறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும்என்று நினைக்கிறேன். மோகன் பாபு சார், விஷ்ணுஇருவருக்கும் வாழ்த்துகள், இந்த படத்தை உருவாக்கியதற்கு. கடுமையாக உழைத்திருக்கிறார்கள், உண்மையாக, நேர்மையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களதுஉண்மையான உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும், என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். கண்ணப்பாஒரு வரிக் கதை தான், கண்ணப்பா யார் என்பது தெரியும், அவர்என்ன செய்தார் என்பது தெரியும். கண்ணப்பா தான் கண்தானத்திற்கு முதலில் வித்திட்டவர், என்று தொகுப்பாளினிசொன்னார்கள், அதுவும் உண்மை தானே. ஆனால் அதைஎல்லாம் தாண்டி, கண்ணப்பா கதையை, உண்மைசரித்திரத்தை மிக பிரமாண்டமான முறையில் விஷ்ணுகொடுத்திருக்கிறார். இந்த படத்திற்காக விஷ்ணு நிறையஆய்வுகள் செய்திருக்கிறார். இந்த படத்திற்காக எதைசெய்தாலும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் என்னைவியக்க வைத்தது. மிகப்பெரிய குழுவை நியூசிலாந்துக்குஅழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரணவிசயம் இல்லை. பொருளாதார ரீதியாகவும், மெனக்கெடல்ரீதியாகவும் சாதாரன விசயம் இல்லை, அதை விஷ்ணு மிகசிறப்பாக செய்திருக்கிறார். அதிகமான குளிர் இருந்தாலும்மேக்கப் போட்டு 7 மணிக்கு அனைவரும் படப்பிடிப்பில்பங்கேற்பது சாதாரண விசயம் இல்லை. சிவன் மீது பக்திஇருக்கிறதோ, இல்லையோ அவரைப் பற்றிய படத்தில் மிகவும்பயபக்தியுடன் ஒட்டுமொத்த படக்குழுவும் பணியாற்றினார்கள்.

 என்னை பொறுத்தவரை பிரமாண்டம் ஒரு பக்கம், நடித்தவர்கள் அனைவரும் முன்னணி கலைஞர்கள். அக்‌ஷய்குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு சார் என பெரியபெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படம்.  அதே சமயம், பெரியநட்சத்திரங்களுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை, அந்தஅந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முன்னணிநட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். இயக்குநர்முகேஷ் குமார் சிங் பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிகிறது, ஆனால் தெலுங்குதிரைப்படத்தை, பான் இந்தியா அளவில் கொண்டுசெல்வதற்கான நுணுக்கங்களுடன் இந்த படத்தை சிறப்பாகஇயக்கியிருக்கிறார். முன்னணி கலைஞர்களுடன்பணியாற்றியது பெருமை என்கிறார், அவருடன்பணியாற்றியதை நானும் பெருமையாக கருதுகிறேன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, பிரபு தேவா ஆகியோருடன்பணியாற்றியது மகிழ்ச்சி. ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாகநடித்திருக்கிறார். படத்தில் அழகாக இருக்கிறார், இங்கேயும்அழகாக இருக்கிறார். மோகன் பாபு சார், விஷ்ணு அதிகமாகமெனக்கெட்டிருக்கிறார்கள். பிரபு தேவாவின் நடனக்காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மிக சிறப்பான படம், உணர்வோடு அனைவரும் நடித்திருக்கிறோம். ஏப்ரல் 25 ஆம்தேதி படம் வெளியாகிறது, படத்தை போல் வெற்றியும்பிரமாண்டமாக அமைய வேண்டும், என்று கடவுளைவேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.