ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஹரி பாஸ்கர், ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் பேசியதாவது: இது என் முதல் மேடை, 12 வது படிக்கும் போது பாலா சாரின் தாரை தப்பட்டை ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்த்தபோது அங்கு அவ்ளோ பேர் கூடியிருந்தார்கள். வெற்றியைத் தாண்டி, அந்த கூட்டமே தனியாகத் தெரிந்தது. அன்று என்னிடம் இருந்த கோனார் தமிழ் உரையில் எழுத்து இயக்கம் என என் பெயரை எழுதினேன். 10 வருடத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி. வாசு சாரின் கோ டைரக்டர் சுகுமார் அண்ணன் ஒரு ஷூட்டிங்கில் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் தான் இதெல்லாம் நடந்தது. அவர் தான் வாசு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்.********
முரளி சாரிடம் இந்தக்கதை சொன்ன போது அவர் ரியாக்ட் செய்யவே இல்லை சைலண்டாகவே இருந்தார். எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் இந்தப்படத்தை நாம் செய்யலாம் என்றார். இவ்வளவு பெரிய வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. நிதின் சாரை முதன் முதலில் வீடியோ காலில் தான் பார்த்தேன். கதை அவருக்கும் பிடித்திருந்தது. இந்தப்படம் செய்ய எனக்கு சப்போர்ட் தேவைப்பட்டது. சுகுமார் அண்ணாவிடம் கேட்டேன் அவர் முழுமையாக வந்து வேலை பார்த்துத் தந்தார். லாஸ்லியா இன்ஸ்டா போஸ்ட் பார்த்துத் தான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். மிக நன்றாக நடித்துள்ளார். இளவரசு சார் இந்தப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். அவருடன் வேலை பார்த்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தின் ரீரெக்கார்டிங் வந்த பிறகு கண்டிப்பாக இசையமைப்பாளர் பெரிய ஹீரோ படத்தில் வேலை செய்வார். ஹரி பாஸ்கர் என் நண்பர் அவர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் படம் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் .
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவத்கு: இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான் என எல்லோரும் இளமையானவர்கள். புதிய இளைஞர்கள் எப்போதும் சாதிக்கும் ஆரவத்துடன் இருப்பார்கள், அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாகப் பன்மடங்கு உழைப்பார்கள் என்பது, என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. இயக்குநர் வாசு சாரிடம் இருந்து வந்தவர் அருண், மிக நன்றாகப் படத்தை உருவாக்கியுள்ளார். நிதின் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .