சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., (31.01.2025) வேப்பேரி, காவல் ஆணையரக, 2வது மாடியிலுள்ளகலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற அமைச்சு பணியாளர்களுக்கானநிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து இன்றுபணி ஓய்வு பெறும் முதுநிலை நிர்வாக அதிகாரி G.தெய்வநாயகியின் 41 வருடங்கள் சீரிய  பணியை பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கிவாழ்த்தினார். மேலும், சீரிய காவலர் குறைதீர்வு நடவடிக்கைகள், பணி ஓய்வு பெறுகின்றகாவல்துறையினரின் அனைத்து துறை சார்ந்த பணப்பலன்கள், சலுகைகள், பதிவு பராமரிப்பு, இதர காவல்துறை சார்ந்த மனுக்கள் தொடர்பான விரைவுநடவடிக்கைகளுடன் பணி செய்து வரும் அமைச்சுப் பணியாளர்களின் பணியைஊக்குவிக்கும் விதமாக, காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும்பதிவு எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், முதுநிலை நிர்வாக அதிகாரிகள்உள்ளிட்ட 267 அமைச்சு பணியாளர்களுக்கு, காவல் ஆணையாளர் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி.சரட்கர், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) .K.அதிவீரபாண்டியன், கூடுதல் துணை ஆணையாளர் குமரகுருபரன், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.