இணைய தளத்தில் வெளியாகும் “தென் சென்னை”

புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில்  அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை” அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். இதில் முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.******

*கதாபாத்திரம்* ரங்கா  – ஜேசன் (கதாநாயகன்)  ரியா – மேகா (கதாநாயகி) இளங்கோ குமணன் – டோனி (கதாநாயகன் மாமா)  சுமா – மரியா (கதாநாயகன் தாய்) தாரணி – தாரா (கதாநாயகன் அக்கா) நிதின் மேஹ்தா – ருத்ரா (வில்லன் 1) திலீபன் – சிவக்குமார் (இன்ஸ்பெக்டர்) தன்ஷிவி, நித்யநாதன் – கிருஷ்ணா (குழந்தை) வத்ஷன் எம் நட்ராஜன் – எஸ் கே (வில்லன் 2) *தொழில்நுட்ப வல்லுநர்கள்  விபரம்*  எழுத்து & இயக்கம் :  ரங்கா ஒளிப்பதிவாளர்: சரத்குமார் எம் எடிட்டிங் தொகுப்பாளர்:  இளங்கோவன் சி எம் பின்னணி இசை :  ஜென் மார்டின் பாடல் இசை : சிவ பத்மயன்  பாடல் : ரங்கா பாடியவர் : நரேஷ் ஐயர் தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து  வண்ணம் – சிட்டகாங்  தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பனி மக்கள் தொடர்பு – ஹேமானந்த்