6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். (20.02.2025) செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் 6–வது செங்கை புத்தக திருவிழா 2024–25, செங்கல்பட்டு நகரம் அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் 20.02.2025 முதல் 28.02.2025 வரை 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. அமைச்சர் கூறியதாவது செங்கல்பட்டு நகரத்தில் இன்று முதல் 9 நாட்களுக்கு நடைபெறவுள்ள புத்தக திருவிழாவில் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் அரசு அலுவலர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டுமென்று கூறினார்கள், சென்ற முறை ரூபாய் 60இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் 1.50 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை இலக்கை எட்டவேண்டுமென்றும் அதற்கு மாவட்ட நிர்வாகமும், அரசு அலுவலர்களும் நமது இயக்கத்தினரும் பொதுமக்கள் பெருமளவில் வருகைபுரிந்து புத்தக கண்காட்சியினை பார்வையிடுவதற்கு உறுதுணையாக இருக்கவேண்டுமென்று கூறினார். மேலும், இந்த புத்தக கண்காட்சியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு மிகபிரம்மாண்டமான முறையில் இந்த புத்தக திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், துறை ரீதியான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு பதிப்பகத்தார்கள் தங்களது படைப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைத்துள்ளனர். இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். மேலும், புத்தகத் திருவிழா நடைபெறுகின்ற 9 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.இதில், பட்டிமன்றம், கலந்துரையாடல், நடனம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கும் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய்100- க்கான கூப்பன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார். இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயணசர்மா,இ.ஆ.ப., சார் ஆட்சியர் (பயிற்சி) திருமதி.எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), மாவட்ட வழங்கல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் (பொ) .சாகிதா பர்வின்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.நரேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மறைமலைநகர் நகர்மன்றத் தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்றத் தலைவர் கார்த்திக் தண்டபாணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சித் தலைவர் திரு.யுவராஜ், செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்றத் தலைவர் திரு.க.அன்பு செல்வன், வனக்குழுத் தலைவர் திரு.வி.டி.திருமலை, செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.தமிழ்மணி, மூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.