சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. மூத்த நடிகர் சத்யராஜ் பரத், எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோரும் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இத்திரைப்படத்தின் மூலம் எம்.குரு இயக்குனராக அறிமுகமாகுகிறார். இத் திரைப்படத்தை ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது, இந்தத் திரைப்படத்தை திரைத்துறையின் மூத்த தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி, விஜயகுமார் அவர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.*****
ஒளிப்பதிவாளர் S.R. சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரபாண்டியன், கொடிவீரன் மற்றும் அயோத்தி ஆகிய படங்களில் தனது ஆத்மார்த்தமான பாடல்களுக்கு பெயர் பெற்ற NR ரகுநந்தன் இசையமைக்க உள்ளார். பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவெளி இல்லாமல் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
*நடிகர்கள்:* சசிகுமார் சத்யராஜ் பரத் மேகா ஷெட்டி மாளவிகா M.S. பாஸ்கர் ‘ஆடுகளம்’ நரேன் சரவணன் கஞ்சா’ கருப்பு இந்துமதி ஜோ மல்லோரி
*படக்குழு:* எழுத்து மற்றும் இயக்கம் : M. குரு தயாரிப்பாளர் : தர்மராஜ் வேலுச்சாமி தயாரிப்பு : ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் இசை : NR ரகுநந்தன் ஒளிப்பதிவு : S.R. சதீஷ்குமார் மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்