தேனி மாவட்டம் பொpயகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு பணிகள் பெரியகுளம் தனியார் மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து 28.07.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது பெரியகுளம் நகர்பகுதியில் அத்தியாவசிய கடைகளுக்கு வருகை புரிகின்ற வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வருகை தருகின்றனரா? என்பத னையும் கடைகளின் உரிமையாளர்கள் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு முககவசம் அணிந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையும் கடைகளின் முன் கைகழுவும் கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், குறிப்பாக வருகை தருகின்ற பொது மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகின்றனரா? என்பது குறித்தும் நகரின் முக்கிய வீதியான மாரியம்மன் கோவில் தெரு பஜார் வீதி மார்க்கெட் பகுதிகளின் வழியே மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டு அச்சமயம் முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு அபார விதிப்பதற்கும், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சமூக இடைவெளியினை சரிவர கடைபிடிப்பதற்கு ஏதுவாகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் போக்குவரத்தை கூடுதலாக சீரமைப்புகள் செய்வதற்காகவும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் இடங்களை தேர்வு செய்து பொதுமக்கள் அதனை முறையாக பின்பற்றுவதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பெரியகுளம் நகராட்சிப் பகுதியின் முக்கிய பகுதிகளான பஜார் வீதி காமராஜர் வீதி மூன்றந்தல் பகுதி வழியாக வரும் வாகனங்கள் புனித அன்னாள் நடுநிலை ப்பள்ளி வளாகம் முன்பும் மற்றும் சுதந்திர வீதி காளிஸ்திரி கோவில் வீதி வழியாக வரும் வாகனங்கள் ஆடு பாலத்தில் நிறுத்தம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர சரக்கு வாகனங்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கான நேரங்களை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே நிர்ணயித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற் கண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பெரியகுளம் நல்லகருப்பண்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ நல மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்று வரும் நபர் களின் எண்ணிக்கை அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை முறை உணவு மற்றும் சுகாதாரம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் சித்த மருத்துவ நலமையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் சுவை சுகாதாரம் ஆகியன குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு வழங்கப் படவுள்ள மதிய உணவான எள்ளு சாதம் கறிவேப்பிலை துவையல் மிளகு குளம்பு கொன்னாங் கண்ணி கூட்டு அவரைக்காய் பொரியல் தூதுவளை ரசம் ஐங்காயமோர் ஆகியவற்றின் தரம் குறித்து உணவருந்தி ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு சித்த மருந்து பொருட்கள் அடங்கிய பெட்டிகளை வழங்கினார். மேலும் இம்மையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் தங்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்தான உணவு முறைகள் பராமரிப்பு முறைகள் யோகா பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் உள்ளீட்ட அனைத்து தேவைகள் மற்றும் அடிப்படை வசதி களையும் நல்ல முறையில் ஏற்படுத்தி கொடுத்து சுகாதாரமான முறையில் பேணிக்காத்து வருவதாக மகிழ்ச்சியுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) தியாகராஜன் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலா நகராட்சி ஆணையர் அசோக்குமார் நகர்நல அலுவலர் தினேஷ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.