தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.08.2020 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர் பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்த தாவது.
தமிழகத்தில் கடந்த நான்கரை மாதங்களாக கொரோனா தொற்று தாக்கம் இருந்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று தேசிய அளவிலான போpடராக அறிவிக்கப்பட்டதன் அடிப்படை யில் அம்மாவின் அரசு பல்வேறு முன்னெச்சாpக்கை நடவடிக்கைகளை போர்கால அடிப்படை யில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ கத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அரசு முதன்மை செயலாளர் நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை மேலு ம் கட்டுப்படுத்திடும் வகையில் பல்வேறு ஆலோசனைகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் மற்றும் பணிகள் குறித்து இன்றைய தினம் நடைபெற்ற இக்கூட்டத்தின் வாயிலாக விhpவாக எடுத்துரைத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இக்கொரோனா நோய் தொற்று ஆரம்ப காலத்தில் 22 நபர்கள் கண்டறி யப்பட்டு அதில் 21 நபர்களுக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நல்ல முறையில் குண மடைந்து வீடு திரும்பினர். மேலும் நோய் தொற்று அறிகுறிவுள்ளவர்களின் குடியிருப்பு பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு அப்பகுதிகளில் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியவசிய பொருட்களை வழங்கும் பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு அப்பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நமது தேனி மாவட்டம் பச்சை நிறமாக மாற்றப்பட்டது.
அதற்கு பின்னால் அரசு விதிமுறைகளுக்குட்பட்ட சில தளர்வுகளை அரசு அறிவித்து மண்டலங் களுக்குட்பட்ட பேருந்து போக்குவரத்துகளை நடைமுறைப்படுத்தியது. அதன்மூலமாகவும் அரு கில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வந்த நபர்களின் வாயிலாகவும் கொரோனா தொற்று பரவி யதால் நமது மாவட்டத்தின் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. வெளி மாநிலங் கள் மற்றும் வெளி மாவட்டங்களிருந்து இருந்து வரும் நபர்களின் மூலமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் மாவட்ட எல்லைப்பகுதிகளில் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும்
சோதனைகளை தீவிரப்படுத்தி கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் நோய் தொற்று கண்ட நபாpன் மூலமாக அவர்களின் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் முறையான மருத்து பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்துதலை உறுதி செய்திட வேண்டும். மேலும் அப்பகுதிகளில் காய்ச்சல் முகாம் மேற்கொண்டு அதிக அளவில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். தற்சமயம் கொரோனா நோய் தொற்றினை தீவிரமாக எதிர் கொள்ள வேண்டிய சூழ்ழ்நிலை உள்ளதால் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண் டும். இது நமக்கு சவலான பணிதான் இதனை முற்றிலும் ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும். வணிகர்கள் வியாபாரிகள் ஆகியோர்களின் ஒத்துழைப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் முக்கியத்துவம் குறித்து அவர்களிடமும் எடுத்துரைத்து ஒத்துழைப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைந்து கொண்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளை மேலும் துரிதப்படுத்தி தேனி மாவட்டத்தை பச்சை நிற மண்டலமாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட்டு பணிகளை மேற்கொள்ள வேண் டும். கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு அரசின் சார்பில் போதுமான
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நாமே நமக்கு கட்டுப் பாடுகளை விதித்து அதன்படி முறையாக செயல்பட்டு நம்மை சார்ந்தோர்களுக் கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். கடந்த 2004-ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி பாதிப்பினால் மேற் கொள்ள ப்பட்ட சீரமைப்புபணிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் அறிவுறையின்படி அங்கு பணியாற்றி உள்ளேன். அவர்களது நேரம் கடைபிடிப்பு மற்றும் திட்டமிட்டப் பணிகள் அனைத்தும் நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளுக்கு அடிப்படையாக அமையும். தற் சமயம் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோர்களின் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையின் கீழ் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று என்பது வெளி நாடுகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்தவர்களிடமிருந்து பரவ தொடங்கியது. தமிழக அரசின் துரித நடவடிக்கையின் கீழ் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தற்சமயம் நோய் தொற்று எண்ணிக்கை குறைவாக உள் ளது. அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். தாங்கள் மேற்கொள்ளும் பணியினை மேலும் துhpதப்படுத்தி குறிப்பாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்திடவும் குறிப்பாக நகர்ப்புறப்பகுதிகள் மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாகவும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொண்டு அதன் மூலம் அறிகுறிகளின் அடிப்படையில் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர் களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திட வேண்டும். நோய் தொற்று கண்டறியப்படுபவர் களின் தொடர்புடையவர்களையும் பரிசோதனைக்குட்படுத்திட வேண்டும்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரின் பரிந்துரையின்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நல மையங்கள் அமைப்பதற்கான தனியார் இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வரும் கொரோனா நல மையங்கள் தவிர்த்து பள்ளி கல்லூரி மற்றும் தனியார் இடங்களையும் தேர்வு செய்து அதனை கொரோனா நல மைங்களாக ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசால் நிர்ணயிக்கப் பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் பொதுமக்கள் சரிவர விதிமுறைகளை கடைபிடித்து வரு வதையும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடு பட்டு வரும் மருத்துவர்கள் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தி பணியாற்றிட வேண்டும். நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் மற்றும் மாவட்ட த்தின் கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதாரத்துறை அலுவல ர்கள் கண்காணித்திட வேண்டும். சுகாதாரத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு நாளும் பெறப்பட்டு வரும் அனுபங்களின் வாயிலாக சிகிச்சைகளை துரிதமாக மேற்கொண்டு நோய் தொற்றினை கட்டுப்படுத்திட வேண்டும். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக கிராம ப்புறப்பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முககவசம் அணிவது சமூக இடைவெளியினை தொடர் ந்து கடைப்பிடிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும். அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங் கிணைந்து செயல்பட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதன் அடிப் படை யில் தேனி மாவட்டத்தினை மீண்டும் பச்சை நிற மண்டலமாக உருவாக்கிட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) தியாகராஜன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி பெரியகுளம் சார் ஆட்சியர் செல்வி டி.சிநேகா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.இளங்கோ இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.லெட்சுமணன் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.செந்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் எஸ்.கவிதா உதவி செயற் பொறியாளர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.