நாடோடிகள், சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களில் கேமராமேனாகவும் ,இப்போது ஜி.வி.எம் இன் வரவிருக்கும் அம்சமான “ஜோசுவா”வை படமாக்கியும் வரும், திரு எஸ்.ஆர். கதிர்,இப்பாடலை எந்த ஒரு தொழில் உபகரணங்களும் இன்றி தனது i phone ஐ மட்டும் வைத்து படமாக்கியுள்ளார். 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் மற்றும் நடிகர்கள் , கோவலோங் சர்ஃபிங் பாயிண்டில் முழு பாடலையும் வெறும் 5 மணி நேரத்தில், குறைந்தபட்ச பட்ஜெட்டில் படமாக்கினர். பிரவீன் முத்துரங்கன், பவித்ரா மாரிமுத்து மற்றும் சாத்விகா ராஜ் ஆகியோர் நடித்துள்ள இந்த பாடலை தர்ஷனா கே.டி பாடியுள்ளார். இவர் “மதுரைக்கு போகதாடி”, “கருப்பு பேரழகா” போன்ற பல ஹிட் பாடல்களால் நம் இதயங்களைத் திருடியவர். இந்தத் தனிப்பாடலை தர்ஷனா கே.டி இன் கணவர் திரு. கார்த்திக் அழகாக இயற்றியுள்ளார். திரு.சாருகேஷ் சேகர் பாடலை எழுதியுள்ளார். பிரவீன் ஆண்டனி தனது நுட்பத்தினை அவருக்கே உரித்தான நிபுணத்துவ தொகுப்பமைப்புகளுள் வெளி ப்படுத்தியுள்ளார், மேலும் இந்த பாடலை” தி ஸ்டுடியோ மெட்ராஸ்” தயாரித்துள்ளது. அழகிய மஞ்சிமா மோகன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி டீஸரை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள நிலை யில், இந்தப் பாடலை ஆகஸ்ட் 12 ஆம் தேதி கௌதம் வாசுதேவ் மேனன் தனது யூடியூப் தளமான ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ இல் வெளியிட உள்ளார்.
ஐடியூன்ஸ் இந்த பாடலை தங்கள் உலகளாவிய தளங்களில் வெளியிடும், மேலும் இசை ஸ்பாட்டிஃபி-யிலும் கிடைக்கும்.இந்த மெல்லிசை மெட்டு, அதன் ரம்மியமான படப்பிடிப்பு களுடன் , நம் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்குமென்பதில் ஐயம்மில்லை.