இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பனிதவயல் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் 08.08.2020 அன்று நேரில்ல் சென்று நீட்ஸ் திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர் ஒருவர் அரசு மானிய கடனுதவியில் செயல்படுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனத்தை பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மத்திய மாநில அரசுகள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதை ஊக்குவித்திடும் நோக்கில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா;களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்; பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்; மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்ற அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பரமக்குடி வட்டம் பனிதவியல் கிராம த்தைச் சேர்ந்த அன்பரசன் என்ற இளைஞர் தன்னிடம் பிளாஸ்டிக் கழிவிலிருந்து எரிபொருள் தயாரிக்கக்கூடிய திட்டம் இருப்பதாகவும் இதனை முழுமையாக செயல்படுத்த உதவிட வேண்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதனடிப்படையில் அத்திட்டம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு சுகாதாரத்திற்கு உகந்த திட்டம் என சான்றளிக்கப்பட்டதை தொடர்ந்து திட்டத்தினை செயல்படுத்த ஊக்குவிக்கும் விதமாக அந்த இளைஞருக்கு மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூபாய் 10000 நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அந்த இளைஞன் சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.2.25 இலட்சம் அரசு மானியத் துடன் ரு.13.75 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கி வழங்கப்பட்டது.
இதன் மூலம் அந்த இளைஞர் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு திட எரிபொருளாக உற்பத்தி செய்யும் சிறுதொழில் நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் 2019-20 ஆம் நிதியாண்டில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 16 சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.80 கோடி அரசு மானியத்தில் ரூ.4.69 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்திற்கு உகந்த எரிபொருளாக பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள இந்த ஆக்கபூர்வமான செயல் திட்டத்தை உருவாக்கிய அந்த இளைஞருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாய வளா;ச்சிக்கு உதவக்கூடிய ஆக்கப்பூர்வ மான சிந்தனைகளை ஊக்குவித்திடும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இதனை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.