தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் குரங்கணி பகுதியில் முழு ஊரடங்கு குறித்த கண்காணிப்பு பணிகள் பலத்த காற்றினால் சேத மடைந்த மிளகு வாழை மற்றும் தோட்ட பயிர்கள் பாதிப்படைந்த பகுதிகள் கொட்டக்குடி பகுதி யில் ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் 09.08.2020 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது போடிநாயக்கனூர் நகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் மூலம் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகா மிற்கு வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோச னைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். குரங் கணி பகுதியில் முழு ஊரடங்கினை கடைபிடிக்காமல் திறந்திருந்த 3 கடை உரிமையாளர் களுக்கு அறிவுரைகளை வழங்கி கடைகளை அடைத்திட உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து குரங்கணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் பெற்ற கடன் செலுத் துவதற்கு 3 மாத கால அவகசாம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோhpக்கை வைத்தனர். கோhpக்கையினை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ள ஆவணம் செய்வதாக மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பலத்த காற்றினால் சேதமடைந்த மிளகு வாழை மற்றும் தோட்ட பயிர்கள் பாதிப்படைந்த சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து பாதிப்படைந்த விவசாய நிலங்களுக்கு உரிய காப்பீடு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முதுவாக்குடி சாலப்பாறை முட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற மலைவாழ் மக்களிடம் அதிக மழை பெய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வட்டாட் சியர் மற்றும் குரங்கணி பகுதி மக்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் கொட்டக்குடி பகுதியில் ஆபத்தான இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 2 வீடுகளை 15 தினங்களுக்கு அகற்றிடவும் அவர்களுக்கு புதிதாக கட்டப்படும் தொகுப்பு வீடுகளில் வீடுகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்;சசி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி போடி நாயக்கனூர் வட்டாட்சியர் மணிமாறன் நகர் நல அலுவலர் ராகவன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.