தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.08.2020 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் தேனி மாவ ட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர் கள் ஆகியோர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமை யில் நடைபெற்றது. வருகின்ற 22.08.2020 அன்று விநாய கர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும் போது பின்பற்றப் பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறி த்தும் இக்கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் விரிவாக எடுத்து ரைத்தார். அதில் கீழ்க்கண்ட அரசின் விதிமுறைகளின் படி விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை கொண்டாடிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும் பொது மக்கள் நலன் கருதியும் பொது இடங் களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலை களை வைத்து விழா கொண்டாடு வதோ கூடாது. விநாயகர் நிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பாக ஒலி பெருக்கி பயன்படுத்து வதற்கு தட்டி போர்டுகள் சுவர் விளம்பரம் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதற்கு அனுமதி கிடையாது விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடை களுக்கோ சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலை யில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழி காட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கும்; திருக்கோவில் நிர்வாகத்திற்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அங்கு புதிதாக விநாயகர் சிலை கள் நிறுவுவதற்கு அனுமதி இல்லை. மேலும் அவ்வாறு வழிபாட்டுத்தலங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் மத நல்லிணக்கத்தை பேணும் விதமாக அவ்வப்போது காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அலுவலர்களின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களால் சட்டப்பிரிவு 144 தடை உத்தரவானது
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது என்ப தை அறிந்து செயல்பட வேண்டும். மேற்காணும் நிபந்தனைகளை கடைப்பிடித்து வருகின்ற 22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையினை அரசின் நிலைப்பாட்டின்படி மேற்க்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் தேனி மாவட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர்கள் ஆகியோர் விநாயகர் சதுர்த்தி பண்டிகையினை கொண்டாடுவதில் தளர்வுகள் வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துரைப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி இ.கா.ப. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் சார் ஆட்சியர் பெரியகுளம் சினேகா இ.ஆ.ப. உதவி ஆட்சியர் (பயிற்சி) ஞ.தாக்ரே சுபம் இ.ஆ.ப. வருவாய் கோட்டாட்சியர் (பொ) உத்தமபாளையம் கார்த்திகாயினி மற்றும் அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கள் தேனி மாவட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.