தப்லீக் ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்’: முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்தது மும்பை உயர் நீதிமன்றம்

டெல்லி தப்லீக் ஜமாத்தில் மதரீதியான கூட்டத்தில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள், நாட்டில் கரோனா பரவுவதற்கு அவர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுள்ளது. 29 வெளிநாட்டவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங் காபாத் அமர்வில் உள்ள நீதிபதிகள் டி.வி.நலவாடே, எம்.ஜி.சேவில்கர் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த வழக்கில் மாநில போலீஸார் இயந்திரத்தனமாகச் செயல்பட்டுள்ளார்கள், மாநிலத்தில் ஆளும் அரசு அரசியல் நிர்பந்தம் காரணமாக செயல்பட்டுள்ளது என்று காட்டமாகத் தெரிவித் தனர். டெல்லியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக் ஜமாத் சார்பில் மதரீதியான கூட்டம் நடந்தது. அந்த நேரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதால் போக்குவரத்து முடக்கப்பட்டு, ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது. இதனால் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியா மல் தப்லீக் ஜமாத்திலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவர்களப் பரிசோதனை செய்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனியாகச் சிகிச்சைக்கு அனுப்பினர். இதில் ஏராளமான வெளிநாட்டினரும் பங்கேற்றிருந்தனர். இதற்கிடையே மகாராஷ்டிராவில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு சென்றுவிட்டு மகாராஷ்டிராவில் தங்கியிருந்த 29 வெளிநாட்டினர் மீது மாநில போலீஸார், தொற்றுநோய் தடுப்புச்சட்டம், மகாரா ஷ்டிரா போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், விசா விதிகளை மீறியதாக வெளி நாட்டினர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவுச் செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் ஐவரிகோஸ்ட், தான்சானியா, டிஜிபோட்டி,கானா, பெனின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 வெளி நாட்டினரும் தங்கள் மீதான வழக்குப்பதிவை ரத்துசெய்யக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில் “இந்திய அரசு அளித்த விசாவில்தான் நாங்கள் வந்தோம். இந்தியக் கலாச்சாரம், உணவு, பழக்கவழக்கம், பாரம்பரியம், உணவுமுறை ஆகியவற்றை அறியவும் வந்தோம். நாங்கள் இந்தியாவுக்குள் வந்தவுடன் விமான நிலையத்தில் எங்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் நெகட்டிவ் என வந்தபின்புதான் எங்களை செல்ல அனுமதித்தார்கள். கரோனா காலத்தில் போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத தால், நாங்கள் மசூதிகளில் தங்கி இருந்தோம். எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எங்களின் வருகை குறித்து அகமதுநகர் மாவட்ட போலீஸாருக்கும் தெரியப் படுத்தப்பட்டது. எங்களுக்கு விசா வழங்கப்பட்டபோது எந்த மதரீதியான கூட்டங்களுக்கும் செல்லக்கூடாது என்று சொல்லப்படவில்லை. ஆதலால், எங்கள் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வில் உள்ள நீதிபதிகள் டி.வி.நலவாடே, எம்.ஜி.சேவில்கர் ஆகியோர் கொண்ட அமர்வு போலீஸாரையும், மாநில அரசையும் விளாசி, முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் 58 பக்கங்களில் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரா அரசு அரசியல் நிர்பந்தத்துடன் செயல்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், சமூகத்தில் உள்ளவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு போலீஸார் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை செயல்படுத்த துணியவில்லை. பேரிடர் அல்லது பெருந்தொற்று வரும்போது பலிகடாவை தேடியிருக்கிறது அரசியல்ரீதியான அரசு, சூழல்கள் வெளிநாட்டினரை அடையாளம் காட்டியதால், அவர்களையே பலிகடாவாக்கியுள்ளது மாநில அரசு. வெளிநாட்டினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் இயல்பாக முகாந்திரம் இல்லாமல், தெளிவற்று இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்கள் இஸ்லாம் மதத்தை பரப்புகிறார்கள், மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள் என்பது எந்த நிலையிலும் சாத்தியமில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பல்வேறு மதத்தினருக்கும் பல்வேறு விதமாக ஒரு அரசு நடந்து கொள்ள முடியாது. வெளிநாட்டிலிருந்து வந்து டெல்லியில் தப்லீக் ஜமாத்தில் பங்கேற்றவர்களால்தான் கரோனா பரவியது என அச்சு ஊடகங்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் மிகப்ெபரிய பிரச்சாரம் செய்தன. கரோனா பரவியதற்கு வெளிநாட்டினர்தான் பொறுப்பு என்ற தோற்றத்தை உருவாக்கின. இது வெளி நாட்டினரை கைது செய்து வைப்பதற்கான தோற்றமாகும்.

தப்லீக் ஜமாத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்பது ஆதாரமில்லாதது. அங்கு நடக்கும் மாநாடு என்பது கடந்த 50 ஆண்டுகளாக, ஆண்டுமுழுவதும் நடந்து வருகிறது. உலகின் பல்ேவறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்து தப்லீக் ஜமாத்தில் பங்ேகற்கிறார்கள். அந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். இது ஆண்டுமுழுவதும் நடந்துவரும் நிகழ்ச்சி, டெல்லி தப்லீக் ஜமாத்தில் ஏராளமானோர் தங்குகிறார்கள். இந்தியா வுக்குள் வந்த இந்த வெளிநாட்டினர் 29 பேரும் மசூதிகளுக்குச் செல்லக்கூடாது என்று எந்த தடையும் இல்லை. அவ்வாறு எந்த தடை உத்தரவும் அரசு பிறப்பித்ததாக எந்த ஆவணத்திலும் இல்லை. இந்திய மக்கள் நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை இந்திய மரபுப்படி, கலாச்சாரப்படி உபசரிக்கிறார்களா என்று கேள்வி எழுப்புகிறோம். கரோனாவால் இதுபோன்ற சூழலில் உருவாகியுள்ளபோது, நாம் மிகவும் பொறுமையாகவும், விருந்தினர்களிடம் கண்ணி யமாகவும் நடக்க வேண்டும். குறிப்பாக இதுபோன்ற மனுதாரர்களிடம் நடக்க வேண்டும். அவர்க ளுக்கு உதவுவதற்கு பதிலாக, விசா விதிமுறைகளை மீறிவி்ட்டதாகக் கூறியும், கரோனா வைரஸ் பரப்பகாரணமாக இருந்தார்கள் என குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கிறோம்.

இந்த வழக்கில் மகாராஷ்டிரா போலீஸார் இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளார்கள், மாநில அரசு அரசியல் நிர்பந்தத்துடன் நடந்துள்ளது. மசூதிகளில் தங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு வைத்துள்ளீர்கள். மசூதிகள் இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தன, அதை குற்றமாகக் கருத முடியாது. லாக்டவுன் காலத்தில் பஞ்சாப் குருத்துவாராவில்கூட புலம் பெயர்ந்தவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். ஊரடங்கு காலத்தில் மாநிலத்தில் எங்கேனும் மசூதிகள் திறக்கப் பட்டு தொழுகை நடந்தது என்று எந்த ஆதாரத்தையும் இதுவரை போலீஸார் தாக்கல் செய்ய வில்லையே. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் சூழல், தொற்று எண்ணிக்கை ஆகியவற் றைப் பார்த்தால், வெளிநாட்டினர் மீது இந்த நடவடிக்கை எடுத்திருக்கக்கூடாது. இந்த நடவடிக் கைக்கு மனம்திருந்தி அவர்களை அவமரியாதை செய்தமைக்கு பதிலாக சில மரியாதைக்குரிய நடவடிக்களை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
——————————————————–