சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 276 வாக்குச்சாவடிகளிலும்,வாக்குச்சாவடி முகவர் களை நியமிக்கும் பணி தொடர்பான கூட்டம் சிவகாசி எம்.பி அலுவலக கூட்டரங்கில், சட்ட மன்றத் தொகுதி தலைவர் வக்கீல் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் பேசும் போது,ஒரு வார காலத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.மேலும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் குமரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யப்பன்,வட்டார காங்கிரஸ் தலைவர் பைபாஸ் வைரம், சிவகாசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஷ்குமார்,மாவட்ட பொதுச்செயலாளர்கள் நியாஸ் அகமத், ராதாகிருஷ்ணன், திருத்தங்கல் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலசக்திவேல், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி தலைவர் வெள்ளூர் உதயகுமார், இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் தானீஷ் மன்னன், சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் அல் அமீன்,சிவகாசி வடக்கு ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொன்னுசாமி,துணைத் தலைவர் திருப்பதி, பொருளாளர் பாலமுருகன்,தெற்கு ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்,வடபட்டி ஊராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன்,சாமிநத்தம் ஊராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார், சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள் ஷேக் முகமது, மரிய சந்தான அந்தோணிராஜ், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பனையடிப்பட்டி ஜெயக்குமார் உட்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும். திருத்தங்கல், சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை உடனே துவக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உட்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.