எமது தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு களின் நீண்ட நாள் போராட்டங்களுக்கும் அவர்களின் வலிகள் நீங்கிட தோள் கொடுக்கும் வகை யிலும் தற்போது கனடாவில் ஒரு நீண்ட நடைப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின் றது. நான்கு நடைப்போராளிகள் உணர்வுள்ளவர்கள் சூழ்ந்து வர உற்சாகமாகப் பயணிக்கின் றார்கள், அவர்கள் பாதங்கள் மட்டுமல் உடலெங்கும் உபாதைகள் வறுத்தி நிற்க.
கனடாவின் தலைநகர் ஒட்டாவா நோக்கிய வலிகள் நிறைந்த பயணம் வெள்ளிக்கிழமையன்று 6வது நாளாக அமைகின்றது. சாதனையொன்றை நிலை நாட்டுவதற்கான நீண்ட நடைப் பயணம் அல்ல இது….வேதனையால் கதறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு போராட்டம்..கனடாவை வாழ்விடமாகக் கொண்ட நடைப் போராளிகள் நால்வர் திருவாளர்கள் மகாஜெயம், யோகேந்திரன், டேவிற் தோமஸ் மற்றும் விஜிதரன் ஆகியோர் இணைந்து ஏற்ற ஒரு சத்தியப் பணயம். வியாழக்கிழமை இரவுப் பொழுதில் இந்த நடைப் போரா ளிகள் தங்கள் முழுதான தூரத்தின் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதியை கடந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களை தொடர்ச்சியாக வாழ்த்துவதோடு, அவர்கள் உடற்சோர் வின்றி தங்கள் உன்னத .நோக்கத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனை செய்வோம். வெள்ளிக்கிழமை அவர்கள் பயணிக்கும் பெருந்தெரு 9 ல் அவர்களின் சரியான இடத்தை கூகுள் வரைபடம் மூலம் அறிந்து கொணடு அங்கு சென்று நடைப் போராளிகளின் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பயணத்திற்கு உற்சாகமூட்டி உணர்வையும் பகிர்ந்து கொள்வதற்காய் அதிகளவில் கூடவுள்ளார்கள் என்று அறியப்படுகின்றது. இங்கு காணப்படும் படங்களில் நடைப் பயணத்தின் போது இணைந்து தங்கள் ஆதரவை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் ஊடக நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்கள் ஆகியோர் நடைப்போராளிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் அவர்களோடு சேர்ந்து நிற்கின்றார்கள்.