இந்நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர், தூய வாழ்வினால் அனைவரின் மனதில் இடம்பிடித்த ஆத்மா Dr. அப்துல்கலாம் அவர்களின் வாழ்வை, அவரது உணர்வுகளை நினைவுகூறும் விதமாக Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான உலகளாவிய குறும் பட போட்டியை நடத்துகிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரை, பத்மபூஷன் இசைப்புயல் AR ரஹ்மான் தனது சமூகவலைதள டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இளைய சமுதாயத்தின் மனதில் இடம்பெற்றிருக்கும் Dr.APJ. அப்துல்கலாம் அவர்களின் வாழ் வை, இன்றைய சமூகம் வெளிக்கொணரும் பொருட்டு இந்தக்குறும்பட போட்டிக்காக ஐந்து வித கருக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இளைய கலைஞர்கள் தங்களின் புதிய சிந்தனையில், வித்தி யாசமான பார்வையில், அவரை இதன் மூலம் வெளிப்படுத்தலாம். திரு Dr.APJ. அப்துல்கலாம் அவர்களுக்கு பெரும் அஞ்சலியாகவும் அவருக்கு விடியோ வடிவிலான பெரும் ஆத்மார்த்த பதி வாகவும் இந்நாட்டில் அவரை ஆதர்ஷமாக கொண்டிருக்கும் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வித மாகவும் இருக்கும். இப்போட்டி 18 வயதை கடந்த அனைவரும் கலந்து கொள்ளக் கூடியது. குறும் படத்தின் அளவு 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகதேர்த்ந்த கலை ஞர்களால் இக்குறும்படங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. மிகச்சிறந்த மூன்று குறும்படங்களுக் கு பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் பல பிரிவுகளில் விருதுகள் பதக்கங்கள் வழங்கப்பட வுள்ளது. இவ்விழாவினை மிகப்பெரிய வெற்றிவிழாவாக்க உங்கள் ஆதரவை எதிர்நோக்கு கிறோம். Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டியின் வெப்சைட் லிங் https://www.apjabdulkalamfoundation.org/shortfilm/index