இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருப்பது, அடிக்கடி ஊரடங்கு பிறப்பிப் பது போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்கு வராது என்று பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணித்துள்ளது. முன்னதாக இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி யாண்டில் மைனஸ் 5 சதவீதமாக சரியும் என்று கணித்த நிலையில், முதல்காலாண்டின் ஏற் பட்ட வீழ்ச்சியால் தனது கணிப்பை மாற்றி மைனஸ் 10.5 சதவீதமாக மேலும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸ் காரணமாக நாட்டில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ைமனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது முன்கணிப்பை வெளியி்ட்டுள்ளது. அதில் கூறப்பட்டு ள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாத முதல் காலாண்டின் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதாரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், ஜூலை-செப்டம்பரில் மீண்டு எழும் என நம்புகிறோம். பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகள் தெரிந்தாலும், இன்னும் மந்தமான சூழலும், சமனற்ற சூழலும் காணப்படுகிறது. இந்தியா ,பிரிட் டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சரிந்து ள்ளது. இந்த நாடுகளில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நீண்டகால பாதிப்பை உண்டாக்கியிரு க்கிறது. குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத்தில் மீண்டும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் இந்தியாவில் புதிதாக கரோனா நோயாளிகள் உருவாகி வருகிறார்கள். இன்னும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடும் கட்டுப்பாடுகள் தளத்தப்படவில்லை. தொடர்ந்து வரும் கரோனா பரவல், நாடுமுழுவதும் அவ்வப்போது தொடரும் ஊரடங்கு நடவடிக்கை போன்றழை பொருளாதார வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் கடுமையாகப் பாதிக்கும்.
ஊரடங்கு நடவடிக்கையால் குடும்பங்களி்்ல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய், வரவு செலவு அறிக்கை, ஆகியவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுல்லாமல் நாட்டில் அதிகரித்து வரும் பணமவீக்கம், பொருட்கள் சப்ளையில் சிக்கல், கலால்வரி போன்றவை பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மை னஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளோம். இதற்கு முன் ஜூன் மாதத்தில் மைனஸ் 5 சதவீதம் என்று கணித்திருந்தோம். ஜூலை-செப்டம்பரான 2-வது காலா ண்டில் பொருளாதாரம் மைனஸ் 9.6 சதவீதமாகவும், அக்ோடபர் டிசம்பரான 3-வது காலா ண்டில் மைனஸ் 4.8 சதவீதமாகவும் வீழ்ச்சி அடையும், 2022 ஜனவரி மார்ச் காலாண்டில் 4 சதவீத மாக வளரும் எனக் கணித்துள்ளோம். ஒட்டுமொத்தமாகக் கணித்தால், நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.